IND vs AUS : நல்லவேள 3வது டெஸ்டில் விளையாடிருந்த அவரோட மொத்த கேரியரும் முடிஞ்சுருக்கும் – ஸ்ரீகாந்த் மகிழ்ச்சி பேட்டி

Srikkanth
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 3வது போட்டியில் மோசமாக பேட்டிங் செய்து 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதனால் அகமதாபாத் நகரில் நடைபெறும் கடைசிப் போட்டியில் வென்றால் தான் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த சில வருடங்களாகவே அதிரடியாக விளையாட வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்டு 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு காரணமான கேஎல் ராகுல் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார்.

KL-Rahul-and-GIll

- Advertisement -

அதனால் எழுந்த விமர்சனங்களை தாங்க முடியாத பிசிசிஐ வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவருடைய ஓப்பனிங் மற்றும் துணை கேப்டன்ஷிப் பதவியைப் பறித்து ஒருநாள் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக மட்டும் விளையாடும் வாய்ப்பை கொடுத்துள்ளது. அதே போல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் திண்டாடி வரும் அவர் இத்தொடரின் முதல் 2 போட்டிகளில் சொதப்பியதால் வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட நிறைய முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். அதனால் துணை கேப்டன்ஷிப் பதவியை பறித்து ராகுலை கழற்றி விட்ட இந்திய அணி நிர்வாகம் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுத்தது.

கேரியரை முடிச்சுருப்பாங்க:
ஆனால் இந்தூரில் முதல் நாளன்றே தாறுமாறாக சுழன்ற பிட்ச்சில் உச்சகட்ட பார்மில் இருக்கும் சுப்மன் கில், ரோஹித் சர்மா உள்ளிட்ட யாராலுமே சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களை குவிக்க முடியவில்லை. அதனால் ராகுலை கழற்றி விட்டதால் தான் இந்தியாவுக்கு தோல்வி கிடைத்தது என்றும் ஒருவேளை ராகுல் விளையாடியிருந்தால் தோல்வியின் மொத்த பழியும் அவர் மீது விழுந்திருக்கும் என்றும் சில ரசிகர்கள் கலாய்த்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் மோசம் என்ற ஐசிசி ரேட்டிங் வழங்கிய இந்தூர் பிட்ச்சில் தற்போதுள்ள ஃபார்முக்கு ராகுல் விளையாடி சுமாராக செயல்பட்டிருந்தால் அவருடைய மொத்த கேரியரும் முடிந்து போயிருக்கும் என்று முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

IND vs AUS Indore Pitch

எனவே 3வது போட்டியில் ராகுல் விளையாடாததால் அவருடைய கேரியர் தப்பித்ததை நினைத்து நாம் மகிழ்ச்சியடைவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “முதலில் நான் கேஎல் ராகுலுக்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நல்ல வேளையாக அவர் இந்த போட்டியில் விளையாடவில்லை. ஒருவேளை அவர் இந்த போட்டியில் விளையாடி சுமாராக செயல்பட்டு அடுத்த போட்டியில் விளையாடினால் அதோடு அவருடைய கேரியர் முடிந்திருக்கும். இதை நான் வெளிப்படையாக சொல்கிறேன். நன்றி கடவுளே நல்லவேளை அவர் விளையாடவில்லை”

- Advertisement -

“இது போன்ற பிட்ச்களில் யாராக இருந்தாலும் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாகும். குறிப்பாக விராட் கோலி உள்ளிட்ட யாராலும் இந்த பிட்ச்களில் ரன்களை அடிக்க முடியாது. ஏனெனில் முதல் இன்னிங்ஸில் குனேமானுக்கு எதிர்பாராத வகையில் சுழல் கிடைத்தது. இது போன்ற பிட்ச்களில் விக்கெட்டுகளை எடுப்பதும் அவ்வளவு கடினமானதல்ல. சொல்லப்போனால் நான் இங்கே பந்து வீசியிருந்தால் கூட சில விக்கெட்டுகளை எடுத்திருப்பேன். இது போன்ற கடினமான விமர்சனங்களை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்”

Kris Srikkanth

“என்னை கேட்டால் இது போன்ற பிட்ச்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. அவர்கள் இதில் தவறு செய்கிறார்கள். 2008 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை நீங்கள் பார்க்கும் போது இப்போது போல பிட்ச் அதிகம் சுழலுக்கு சாதகமாக இல்லை. இருப்பினும் இந்தியா 2 – 0 என்ற கணக்கில் வென்றது”

இதையும் படிங்க:IND vs AUS : முரளிதரன், வார்னேவை விட அவர் தான் இந்தியாவில் நம்பர் ஒன் வெளிநாட்டு பவுலர் – ஆஸி பவுலரை பாராட்டும் ரோஹித் சர்மா

“ஆனால் இங்கே முதல் நாளிலிருந்தே தாறுமாறாக சுழல்கிறது. இது போன்ற பிட்ச்களில் பேட்டிங் செய்வதை பார்ப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு எந்த விளம்பரத்தையும் ஏற்படுத்தாது” என்று கூறினார்.

Advertisement