கீப்பிங் கிளவ்ஸை அணிந்து ஃபீல்டிங் செய்த வீரரால் அணிக்கு வந்த சோதனை – வீடியோ உள்ளே

australia
- Advertisement -

ஆஸ்திரேலிய உள்ளூர் தொடரில் விக்கெட் கீப்பரின் கிளவ்சை எடுத்து ஃபீல்டர் அணிந்ததால், எதிரணிக்கு 5 ரன்கள் போனஸாகக் கொடுக்கப்பட்டது.

las

- Advertisement -

ஆஸ்திரேலிய உள்ளூர் அணிகளான குயின்ஸ்லாந்து மற்றும் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஷெப்ஃபீல்டு ஷீல்டு கோப்பைக்கான போட்டி, கப்பா மைதானத்தில் நடந்தது. அந்தப் போட்டியில், வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணி வீரர் லெக் திசையில் பந்தை அடிக்க, குயின்ஸ்லாந்து விக்கெட் கீப்பர் ஜிம்மி பியர்ஸன், அதைத் துரத்திச்சென்றார். கீப்பிங் கிளவ்ஸை அவர் கழற்றி எறிந்துவிட்டு ஓடினார். அப்போது, ஸ்லிப்பில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த மேட் ரென்ஷா, அந்த கிளவ்ஸை அணிந்துகொண்டு பியர்ஸன் எறிந்த பந்தைப் பிடித்தார். பின்னர் அந்த கிளவ்ஸை பியர்ஸனிடம் ரென்ஷா அளித்தார்.

ஐசிசி விதிமுறைகளின்படி மைதானத்தில் விக்கெட் கீப்பர் மட்டுமே கிளவ்ஸ் அணிய அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை ரென்ஷா மீறியதால், வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்கு 5 ரன்கள் போனஸாக வழங்கப்பட்டது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய இணையதளத்துக்கு இதுதொடர்பாகப் பேட்டியளித்த ரென்ஷா, “எனக்கு மிக அருகில் அந்த கிளவ்ஸ் கிடந்ததால், விளையாட்டாக அதை எடுத்து அணிந்துகொண்டு பந்தைப் பிடித்தேன்’’ என்று தெரிவித்துள்ளார். அந்த போட்டியில் குயின்ஸ்லாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

Advertisement