ஐபிஎல் சாதனையை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதே பெருமை, ஆசை – நட்சத்திர பவுலரின் விருப்பம்

Chahal RR 5 For
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை பங்கேற்ற 13 போட்டிகளில் 8 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. தற்போது நிலைமையில் எஞ்சிய கடைசி போட்டியில் தோல்வி அடைந்தாலும் கூட அந்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது 99% உறுதியாகியுள்ளது. எனவே 2008இல் ஐபிஎல் வரலாற்றின் முதல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்த ராஜஸ்தான் ராயல்ஸ் பல வருங்களுக்குபின் இந்த முறை 2-வது கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

RR

- Advertisement -

அந்த அணிக்கு பேட்டிங்கில் ஜோஸ் பட்லர் சிம்ரோன் ஹெட்மையர் ஆகியோருடன் கேப்டன் சஞ்சு சாம்சன் தேவையான ரன்களை அடித்து வெற்றிக்கு பங்காற்றி வருகிறார். அதேபோல் வேகப்பந்துவீச்சில் ட்ரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்னா ஆகியோர் கைகொடுத்த சுழல் பந்துவீச்சில் இரட்டை குழல் துப்பாக்கிகளாக தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் யுஸ்வென்ற சஹால் ஆகியோர் எதிரணிகளை மிரட்டுகின்றனர்.

கலக்கல் சஹால்:
அதிலும் இதுவரை பங்கேற்ற 13 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை 7.76 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்து வரும் சஹால் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்து அதற்கான கௌரவ ஊதா தொப்பியை தன் வசம் வைத்துள்ளார். கடந்த 2011 வாக்கில் முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் வாயிலாக ஐபிஎல் தொடரில் கால் பதித்த அவர் 2013 – 2021 வரை பெங்களூரு அணியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார்.

Chahal RR

குறிப்பாக தொட்டாலே சிக்ஸர்கள் பறக்கக்கூடிய சின்னசாமி மைதானத்தில் பொல்லார்ட், ரசல் போன்ற காட்டடி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக தைரியமாக பந்துவீசிய அவர் நிறைய விக்கெட்டுகளை எடுத்து காலப்போக்கில் அதன் காரணமாகவே இந்திய அணிக்காக விளையாடி இன்று முன்னணி சுழல்பந்து வீச்சாளராகும் அளவுக்கு உயர்ந்துள்ளார். இருப்பினும் சமீப காலங்களில் அவரின் பந்துவீச்சில் லேசான சரிவு ஏற்பட்டதால் கடந்த 2021 ஐசிசி டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

- Advertisement -

அதே காரணத்தால் பெங்களூர் அணி நிர்வாகமும் இந்த வருடம் அவரை கழற்றி விட்ட நிலையில் ராஜஸ்தானுக்காக அசத்தலாக செயல்பட்டு வரும் ஊதா தொப்பியை வென்று மீண்டும் இந்திய அணியில் தனது இடத்தை வலுவாக உறுதி செய்துள்ளார். குறிப்பாக வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் அவரை தேர்வு செய்வதற்கான சூழல்கள் பிரகாசமாகியுள்ளது.

டெஸ்ட் பெஸ்ட்:
இதனால் அவர் மகிழ்ச்சியாக இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 2016இல் முதல்முறையாக இந்திய அணியில் கால்தடம் பதித்த அவர் இதுவரை ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக செயல்பட்டு 172* விக்கெட்டுகளை எடுத்து முதன்மை சுழல் பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார். குறிப்பாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்து வீச்சாளராக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இருப்பினும் இவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு மட்டுமே சரிபட்டு வருவார் என்ற நோக்கில் பார்க்கும் தேர்வுக்குழுவினர் இதுநாள்வரை டெஸ்ட் அணியில் வாய்ப்பளிக்காமலேயே இருந்து வருகின்றனர். அந்த வகையில் என்னதான் டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதே தமது ஆசை என்று சஹால் தெரிவித்துள்ளார். இதுப்பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடைசி 10 ரஞ்சி கோப்பை போட்டிகளில் நான் 50க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ளேன். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு எப்போதுமே எனது முன்னுரிமை உள்ளது. அதிலும் டெஸ்ட் பிளேயர் என்று மற்றவர்கள் அழைப்பது மிகப்பெரிய கவுரவமாகும். நிறைய வீரர்கள் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடலாம். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் தான் உங்களது பொறுமையும் திறமையும் சோதிக்கும் சிறந்த கிரிக்கெட்டாகும்” என்று கூறினார்.

Chahal

அவர் கூறுவது போல என்னதான் டி20 கிரிக்கெட் கொடிகட்டிப் பறந்தாலும் இன்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் திறமையை வெளிப்படுத்தி நாட்டுக்காக வெற்றியை தேடித்தருபவரை தான் சிறந்த கிரிக்கெட் வீரராக வல்லுநர்கள் போற்றுகின்றனர். மேலும் இந்த நவீன கிரிக்கெட்டில் நிறைய வீரர்கள் டி20 கிரிக்கெட் விளையாடி கோடிகோடியாக சம்பாதித்தால் போதும் என்று நினைக்கின்றனர்.

இதையும் படிங்க : விராட் கோலி பாவம் – 2016 ஐபிஎல் பைனலில் நான் தான் தவறு செய்து விட்டேன், மனம் வருந்தும் நட்சத்திர வீரர்

அதனால் நிறைய பேர் நாட்டுக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை பறக்கணித்துவிட்டு டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர். அவர்களுக்கு மத்தியில் டி20 போட்டிகளை விட டெஸ்ட் கிரிக்கெட் தான் உயர்ந்தது அதுவே கௌரவம் எனக்கூறும் சஹால் அதில் விளையாடுவதற்கு ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளது உண்மையாகவே பாராட்டத்தக்கதாகும்.

Advertisement