டெஸ்ட் சாம்பியன்ஷிப் : 5 ஆவது நாளான இன்றாவது போட்டி நடைபெறுமா ? – வெளியான அறிக்கை

WTC
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி கடந்த 18ஆம் தேதி சவுத்தாம்ப்டன் நகரில் துவங்கியது. இந்த போட்டி துவங்கிய முதல் நாளில் முழுவதுமாக மழைபெய்த காரணத்தினால் ஒரு பந்து கூட வீசப்பட்ட நிலையில் முதல் நாள் போட்டி முடிவுக்கு வந்தது. பின்னர் இரண்டாவது நாளில் போட்டி ஆரம்பிக்க முதல் இன்னிங்ஸில் இந்திய அணி விளையாடியது.

kohli rahane

- Advertisement -

ரகானே மற்றும் கோலி ஆகியோர் ஓரளவு சிறப்பாக விளையாட மற்ற அனைவரும் பேட்டிங்கில் பெரியதாக கைகொடுக்கவில்லை. இதன் காரணமாக இந்திய அணி 217 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை எடுத்துள்ளது.

இருப்பினும் இரண்டாவது நாள் ஆட்டத்திலும் சரி, 3வது நாள் ஆட்டத்தில் சரி போதிய வெளிச்சம் இன்மை காரணமாக போட்டி தடைபட்டது. அதுமட்டுமின்றி நேற்றைய நான்காம் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது. இப்படி இந்த இறுதிப் போட்டி துவங்கிய நாளில் இருந்து ஒரு நாளில் கூட போட்டி முழுமையாக நடைபெறவில்லை.

Rain

இந்நிலையில் இன்று 5வது நாள் போட்டியாவது முழுமையாக நடைபெறுமா ? என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. அதன்படி தற்போது வெளியான வானிலை அறிக்கையில் இன்று ஐந்தாவது நாளில் காலை நல்ல மழை பெய்யும் என்றும் 2வது செசனுக்கு பிறகு போட்டியை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக 5 வது நாளிலும் பெரும்பகுதி மழையால் பாதிக்கப்படும் என்று தெளிவாகியுள்ளது.

Ageas-bowl

நாளை ஆறாவது நாள் ரிசர்வ் டே இருந்தாலும் போட்டி இன்னும் முதல் இன்னிங்ஸ் கூட முடிவு பெறாத நிலையில் நிச்சயம் இந்த போட்டியில் வெற்றி தோல்வி என எதுவும் இருக்காது என்றும் போட்டி டிராவில் முடிவடைந்தது இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்துகொள்ளவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement