
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியானது தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற வரும் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் ஆதிக்கத்தை செலுத்தி வரும் தென்னாப்பிரிக்க அணியானது ஏற்கனவே அந்த அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.
அதுதவிர்த்து 2024-2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முதல் அணியாக அந்த அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதற்கு மிக முக்கியமான காரணமாக அந்த அணியின் கேப்டன் தெம்பா பவுமா திகழ்கிறார்.
ஏனெனில் அவரது பேட்டிங் பார்ம் சமீபத்தில் அசத்தலாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் சுழற்சியில் 7 போட்டிகளில் விளையாடியு 2 சதங்கள், நான்கு அரை சதங்கள் என 54 ரன்கள் சராசரியுடன் 609 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.
அவரது இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக அந்த அணி தொடர்ந்து வெற்றிகளை பெற்று வருகிறது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன்களின் வரிசையில் தனது பெயரை அவர் பதிவு செய்யவுள்ளார். அதோடு அவர் தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு 8 போட்டிகளில் வழிநடத்தி தொடர்ச்சியாக 7 வெற்றிகள் மற்றும் ஒரு ட்ரா என தோல்வி தழுவாத கேப்டனாக திகழ்ந்து வருகிறார்.
ஒருவேளை பாகிஸ்தான் அணிக்கெதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவர் அந்த அணியை வெற்றிபெற செய்யும் பட்டத்தில் தொடர்ச்சியாக 8 டெஸ்ட் வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்துவார். கடந்த 1951-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாலின் லிண்ட்சே என்பவர் தொடர்ச்சியாக 8 டெஸ்ட் வெற்றிகளை பெற்றுள்ளார்.
இதையும் படிங்க : உங்கள மாதிரி சேண்ட்பேப்பரால் ஏமாத்தாம.. நாட்டுக்காக நேரா தான் மோதுனேன்.. ஆஸிக்கு விராட் கோலி பதிலடி
அவரது சாதனையை தற்போது தெம்பா பவுமா சமன் செய்யவுள்ளார். அதுமட்டுமின்றி ஏற்கனவே அந்த அணியை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்ற அவர் அந்த போட்டியிலும் வெற்றிபெறும் பட்சத்தில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டனான க்ரீம் ஸ்மித்தின் லெகசியை உடைக்க காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.