- Advertisement -
உலக கிரிக்கெட்

இந்தமுறை நல்ல சேன்ஸ் கிடைச்சிருக்கு அதை விட மாட்டோம்.. ஆஸியை எச்சரித்த – தெம்பா பவுமா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியானது வரும் ஜூன் 11-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கான இறுதிப் போட்டியில் விளையாட பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணிகளும் மோதுகின்றன. இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வாய்ப்பு கிடைச்சிருக்கு : தெம்பா பவுமா

இந்த இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் முயற்சியில் பங்கேற்க இருக்கிறது. அதேசமயம் இதனால் வரை ஐசிசி சாம்பியன் பட்டத்தை வெல்லாத ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்க காத்திருருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி தற்போது அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறும் பட்சத்தில் முதல் முறையாக ஐசிசி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் வாய்ப்பினை பெற்றுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த நல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இந்த வாய்ப்பை தவற விட மாட்டோம் என தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா வெளிப்படையான சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதில் மகிழ்ச்சி அடைகிறோம். இம்முறை ஐ.சி.சி சாம்பியன் பட்டத்தை வெல்ல எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு காத்திருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவம் தற்போது தான் அனைவரது மத்தியிலும் நல்ல கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க : இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்க்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடையாது – காரணம் என்ன?

இம்முறை போட்டி நடைபெறும் லார்ட்ஸ் மைதானம் எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறோம். அதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வெல்வோம் என்கிற நம்பிக்கையும் எங்களிடம் உள்ளது என தெம்பா பவுமா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -