IND vs RSA : இந்தியா பேட்டிங் பண்ணும்போதே எனக்கு அந்த விஷயம் தெரிஞ்சி போச்சி – வெற்றி குறித்து பவுமா பேட்டி

Bavuma
- Advertisement -

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 211 ரன்கள் குவித்தும் தென் ஆப்பிரிக்கா அணி அதனை 19.1 ஓவரில் எளிதாக சேஸிங் செய்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் சாதனை பயணத்தை தடுத்து நிறுத்திய தென் ஆப்பிரிக்க அணி இந்த தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய மண்ணில் எவ்வாறு தென் ஆப்பிரிக்கா அணி இம்முறை சமாளித்து விளையாடப் போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் முதல் போட்டியிலேயே மிகப்பெரிய இலக்கை சேஸிங் செய்து அசத்தியுள்ளது.

INDvsRSA

- Advertisement -

இதன் காரணமாக இனிவரும் போட்டிகளின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. நேற்றைய முதல் டி20 போட்டியின்போது இரண்டு அணிகளுமே சேர்த்து 420 ரன்களுக்கு மேல் அடித்ததால் ரசிகர்களுக்கு இந்த போட்டி ஒரு நல்ல விருந்தாக அமைந்தது. இருப்பினும் இறுதியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது பெரும் வருத்தத்தை அளித்திருந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியது குறித்து பேசிய தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் பாவுமா கூறுகையில் :

நாங்கள் நேரம் ஆக ஆக இந்த மைதானம் நன்றாக பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும் என்று நினைத்தோம். அந்த வகையில் இரண்டாவதாக நாங்கள் பேட்டிங் செய்யும் போதும் மைதானம் பேட்டிங்க்கு முழுவதுமாக சாதகமாக இருந்தது. இந்த மைதானத்தில் எப்படி பந்து வீசுவது என்று கணிப்பது சற்று கடினமாக இருந்தது. அந்த அளவிற்கு மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக இருந்தது. இந்திய அணியின் தொடக்க வீரரான இஷான் கிஷன் மிக எளிதாக ரன்களை குவித்து வந்தார்.

miller

அதோடு சுழற்பந்து வீச்சாளர்களை இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக எதிர் கொண்டதால் ஒரு கட்டத்தில் எவ்வாறு பந்து வீசி முடிக்கலாம் என்று யோசிக்கத் தோன்றியது. இடது கை மற்றும் வலது கை பேட்ஸ்மேன்கள் செட்டிலானால் நல்ல ரன் குவிப்பு இந்த மைதானத்தில் வரும் அந்த வகையில் இந்திய அணிக்கும் சரி எங்களுக்கும் சரி இந்த மைதானத்தில் நிறைய ரன்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக வந்தது.

- Advertisement -

முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் டேவிட் மில்லர் மற்றும் வேண்டர்டசன் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து எங்களை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். முதல் இன்னிங்சில் இந்திய அணி விளையாடும் போதே இது ஒரு நல்ல விக்கெட் என்பதை தெரிந்து கொண்டோம். எனவே நிச்சயம் சூழ்நிலைக்கு தகுந்தவாறு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து வந்தால் போட்டியில் வெற்றி பெற முடியும் என்பது எங்களுக்கு தெரிந்தது.

இதையும் படிங்க : INDvsRSA : 211 ரன்கள் அடிச்சும் நாங்க தோக்க இதுமட்டும் தான் காரணம் – புதிய கேப்டன் ரிஷப் பண்ட் வருத்தம்

அந்த வகையில் எங்களது வீரர்களும் இந்திய அணியின் ஸ்பின்னர்களுக்கு எதிராக அபாரமாக விளையாடியதால் ரன்கள் வந்தது, இந்த மைதானம் பேட்டிங்கிற்கு ஏதுவாக இருந்ததால் வெற்றி எங்களுக்கு சாதகமானது. டேவிட் மில்லர் மீண்டும் தனது சிறப்பான ஃபினிஷிங்கை இந்த போட்டியில் வழங்கியுள்ளார். இந்த வெற்றியை நாங்கள் அப்படியே தொடர விரும்புகிறோம் எனவும் தெம்பா பவுமா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement