INDvsRSA : 211 ரன்கள் அடிச்சும் நாங்க தோக்க இதுமட்டும் தான் காரணம் – புதிய கேப்டன் ரிஷப் பண்ட் வருத்தம்

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் பவுமா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதன் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 76 ரன்களையும், ஸ்ரேயாஸ் அய்யர் 36 ரன்களையும் குவித்தனர்.

Ishan Kishan 79

- Advertisement -

அதனைத் தொடர்ந்து 212 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் மிடில் ஆர்டரில் விளையாடிய மில்லர் மற்றும் ராசி வேண்டர்டசன் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 19.1 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 212 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணியின் உலக சாதனையை தகர்த்த தென்னாப்பிரிக்க அணி இந்த தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் : நாங்கள் பேட்டிங் செய்யும்போது போதுமான அளவுக்கு போதுமான அளவு ரன்களை குவித்ததாகவே நினைக்கிறேன்.

ஆனால் பந்து வீச்சில் நாங்கள் நினைத்த திட்டங்களை எங்களால் செயல்படுத்த முடியவில்லை. அதற்கு எதிர் அணியின் பேட்ஸ்மேன்களை பாராட்டியாக வேண்டும். ஏனெனில் மில்லர் மற்றும் வேண்டர்டசன் ஆகியோர் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். நாங்கள் பேட்டிங் செய்யும் போது எங்களுக்கு எதிராக அவர்கள் நிறைய ஸ்லோவர் பந்து வீசினார்கள். ஆனால் போட்டியில் 2-வது இன்னிங்சில் எங்களால் ஸ்லோவர் பந்துகளை வீச முடியவில்லை.

- Advertisement -

அதே போன்று மில்லருக்கு எதிராக நாங்கள் சிறப்பாக பந்துவீச நினைத்தபோது மைதானம் முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதாரணமாக மாறியதால் அவர்கள் இன்னும் எளிதாக பெரிய ஷாட்டுகளை விளையாட முடிந்தது. இந்த போட்டியில் நாங்கள் அளித்த ரன்களை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

இதையும் படிங்க : ஏமாற்றமா இருக்கு ! கடினமாக உழைத்து போராடி கிடைத்த வாய்ப்பை காயத்தால் இழந்த வீரரின் சோகமான பதிவு

ஆனாலும் மைதானத்தின் தன்மை முற்றிலும் பேட்டிங்க்கு சாதகமாக இருந்ததால் தென்ஆப்பிரிக்க அணி எங்களை வீழ்த்தினர். நிச்சயம் அடுத்த போட்டியில் இதே போன்று ஒரு சூழல் நிலவும் போது நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டு அவர்களை வீழ்த்துவோம் என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement