ஏமாற்றமா இருக்கு ! கடினமாக உழைத்து போராடி கிடைத்த வாய்ப்பை காயத்தால் இழந்த வீரரின் சோகமான பதிவு

Kuldeep
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூன் 9-ஆம் தேதி துவங்கியது. இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் கேஎல் ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் டெல்லியில் நடைபெற்ற முதல் போட்டிக்காக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவர் திடீரென்று கடைசி நேரத்தில் காயமடைந்ததால் தொடரிலிருந்து முழுமையாக வெளியேறும் நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இந்த தொடரின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

Kuldeep-1

- Advertisement -

அத்துடன் அதே வலை பயிற்சியின் போது நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவும் துரதிஷ்டவசமாக காயமடைந்ததால் இந்த தொடரில் இருந்து மொத்தமாக வெளியேற வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது. இருப்பினும் அவருக்கான மாற்று வீரரை பிசிசிஐ அறிவிக்கவில்லை. முக்கிய நேரத்தில் இந்த 2 முக்கிய வீரர்கள் காயமடைந்தது இந்திய அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது.

கடும் உழைப்பு:
அதில் குல்தீப் யாதவை பொருத்தவரை இந்த காயம் அவரது சொந்த கேரியரில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். ஏனெனில் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியதால் கடந்து 2017இல் இந்தியாவுக்காக அறிமுகமாகி 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை சுழல்பந்து வீச்சாளராகும் அளவுக்கு அபார வளர்ச்சி கண்டார். அதேப்போல் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக அட்டகாசமாக பந்துவீசிய அவர் 2018இல் இந்தியாவின் முன்னணி சுழல் பந்து வீச்சாளராக வலம் வந்தார். ஆனால் 2019 உலகக் கோப்பைக்கு பின் அவரின் பந்துவீச்சில் ஏற்பட்ட சரிவு அவரை இந்திய அணியில் இருந்து தூக்கி எறிய வைத்தது.

kuldeep 1

அதன் காரணமாக ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா அணியில் பெஞ்சில் அமர வைக்கப்பட்ட அவருக்கு கடினமான நேரத்தில் வாய்ப்பையும் ஆதரவையும் வழங்காத அந்த அணி நிர்வாகம் வெளியிலும் விடாமல் தொடர்ந்து பெஞ்சில் அமர வைத்து அணிக்குள் ஒரு வேலைக்காரனை போல் நடத்தியதாக அவரின் பயிற்சியாளர் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். நல்லவேளையாக 2021 ஐபிஎல் தொடரின்போது பாதியில் காயமடைந்த அவரை அத்தோடு கொல்கத்தா அணி நிர்வாகமும் கழற்றி விட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் காயத்திலிருந்து குணமடையும் வேலைகளில் ஈடுபட்டார்.

- Advertisement -

போராட்ட வாய்ப்பு:
அதே சமயத்தில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மாவும் காயமடைந்து கிரிக்கெட் அகடமியில் குணமடைவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார். அதைப் பயன்படுத்திய குல்தீப் யாதவ் அங்கு அவரிடம் தனது திறமைகளை காண்பித்ததால் கடந்த பிப்ரவரியில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக நடந்த டி20 தொடர்களில் அவரை ரோகித் சர்மா தேர்வு செய்தார். இருப்பினும் அக்சர் படேல் போன்ற இதர பவுலர்கள் இருந்ததால் முழு வாய்ப்பு பெறாத அவர் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் தவித்தார். அந்த நிலையில் துவங்கிய ஐபிஎல் 2022 தொடரில் தன்னை நம்பி வாங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு தீயாக பந்துவீசிய அவர் முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகள் எடுத்து வெற்றி பெற வைத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

Kuldeep Yadhav vs KKR

அதோடு நிற்காமல் பெரும்பாலான போட்டிகளில் மிரட்டலாக பந்துவீசிய அவர் தனது முன்னாள் அணியான கொல்கத்தாவுக்கு எதிரான 2 லீக் போட்டிகளிலும் வெறித்தனமாக பந்துவீசி டெல்லியை வெற்றி பெற வைத்து ஆட்ட நாயகன் விருதை வென்று பழிதீர்த்தார். அந்த வகையில் மொத்தம் 14 போட்டிகளில் 4 ஆட்டநாயகன் விருது உட்பட 21 விக்கெட்டுகளை எடுத்த அவர் பழைய பன்னீர்செல்வமாக முழு பார்முக்கு திரும்பினார். அதன் காரணமாக இந்த தென்னாப்பிரிக்க தொடரிலும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையிலும் அவருக்கான நிலையான இடம் உறுதியானது.

- Advertisement -

ஏமாற்றமா இருக்கும்:
ஆனால் போட்டி துவங்க ஒருநாள் முன்பாக கடைசி நேரத்தில் ஏற்பட்ட துரதிஷ்டவசமான காயம் அவரை மீண்டும் வெளியே தூக்கிப் போட்டுள்ளது. இதிலிருந்து அவர் திரும்பி வருவதற்குள் வேறு ஏதேனும் பவுலர் சிறப்பாக பந்து வீசினால் அதன்பின் இவர் நல்ல பார்மில் இருந்தால் கூட வாய்ப்பு கிடைப்பது கடினமாகிவிடும். அதனால் போராடி பெற்ற வாய்ப்பு காயத்தால் பறி போனதால் மனமுடைந்துள்ள குல்தீப் யாதவ் இந்தியாவுக்கு தனது ஆதரவு எப்போதும் உள்ளதென்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : முக்கிய கட்டத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் செய்த தவறினால் பறிபோன இந்திய அணியின் உலகசாதனை கனவு – நடந்தது என்ன?

இது பற்றி அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “தென் ஆப்ரிக்க தொடரில் காயத்தில் இருந்து வெளியேறியது மிகவும் ஏமாற்றமாக உள்ளது. ஆனாலும் நமது வீரர்கள் களத்தில் அவர்களின் சிறந்த திறமையை வெளிப்படுத்துவார்கள் என்பதால் அவர்களுக்கு நான் ஆதரவாக உள்ளேன். இதிலிருந்து வலுவாக திரும்பி வரும் தருணத்தை எதிர்நோக்கியுள்ளேன்” என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

Advertisement