முக்கிய கட்டத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் செய்த தவறினால் பறிபோன இந்திய அணியின் உலகசாதனை கனவு – நடந்தது என்ன?

Shreyas Iyer IND
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூன் 9-ஆம் தேதியன்று துவங்கியது. அதில் நேற்று இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவிற்கு இஷான் கிசான் – ருதுராஜ் கைக்வாட் ஓப்பனிங் ஜோடி பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

அதில் 3 சிக்ஸருடன் 23 (15) ருதுராஜ் ஆட்டமிழந்தாலும் சமீபத்திய ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டு விமர்சனத்திற்கு உள்ளான இஷான் கிசான் மிரட்டலாக பேட்டிங் செய்து 11 பவுண்டரி 3 சிக்சருடன் 76 (48) ரன்கள் விளாசி அவுட்டானர். அதன்பின் மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் அய்யர் தனது பங்கிற்கு 1 பவுண்டரி 3 சிக்சருடன் 36 (27) ரன்களும் கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடியாக 2 பவுண்டரி 2 சிக்சருடன் 29 (16) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

212 ரன்கள் இழப்பு:
இறுதியில் 2022 ஐபிஎல் கோப்பையை வென்று நீண்ட நாட்களுக்கு பின் திரும்பிய ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி 3 சிக்சருடன் 31* (12) ரன்கள் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் இந்தியா 211/4 ரன்கள் குவித்தது. அதைத்தொடர்ந்து 212 என்ற கடினமான இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு கேப்டன் தெம்பா பவுமா 10 (8) ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய ட்வயன் பிரெடோரியஸ் அதிரடியாக 1 பவுண்டரி 4 சிக்சருடன் 29 (13) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த ஒருசில ஓவர்களில் தடுமாறிக் கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக் 22 (18) ரன்களில் ஆட்டமிழந்ததால் 81/3 என தென்னாபிரிக்கா தடுமாறியது.

அந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜோடி சேர்ந்த ராசி வேன் டெர் டுஷன் – டேவிட் மில்லர் ஆகியோர் ஆரம்பத்தில் பொறுமையாக பேட்டிங் செய்தாலும் அதன்பின் மிரட்டலாக ரன்களை குவித்தனர். குறிப்பாக சமீபத்தில் ஐபிஎல் தொடரில் குஜராத்தின் வெற்றியில் துருப்புச் சீட்டாக செயல்பட்ட டேவிட் மில்லர் அதிரடியான சிக்சர்களை பறக்கவிட்டு ரன்ரேட்டை எகிற விடாமல் பார்த்துக் கொண்டார். 9-வது ஓவரில் ஜோடி சேர்ந்த இவர்கள் ஹர்ஷல் படேல், புவனேஸ்வர் குமார் போன்ற தரமான பலவர்களையும் சரமாரியாக அடித்து வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

- Advertisement -

தென்ஆப்பிரிக்கா மாஸ்:
இவர்களை அவுட் செய்ய முடியாமல் திணறிய இந்திய பவுலர்கள் அதில் தோல்வியடைந்தது மட்டுமல்லாமல் ரன்களையும் வாரி வழங்கியதால் 19.1 ஓவரிலேயே 212/3 ரன்களை எடுத்த தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டலான வெற்றி பெற்றது.

அதில் ராசி வேன் டெர் டுஷன் 7 பவுண்டரி 5 சிக்சருடன் 75* (46) ரன்களும் டேவிட் மில்லர் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 64* (31) ரன்களும் எடுத்து முரட்டுத்தனமான ஃபினிஷிங் கொடுத்து இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்தனர். அதனால் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 – 0* என்ற கணக்கில் அந்த அணி முன்னிலையும் பெற்றுள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் அசத்தினாலும் பந்துவீச்சில் அதுவும் கடைசி 10 ஓவர்களில் ரன்களை வாரி வழங்கிய இந்தியாவுக்கு சொந்த மண்ணில் தலைகுனியும் நிலை ஏற்பட்டது.

- Advertisement -

உலகசாதனை கனவு:
1. முன்னதாக கடந்த 2021 ஐசிசி உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் நாக் அவுட் சுற்று வாய்ப்பு பறிபோன நிலையில் ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான கடைசி 3 போட்டியில் இந்தியா வென்றது.

2. அத்துடன் ரோகித் சர்மா புதிய கேப்டனாக பொறுப்பேற்றதும் நவம்பர் 2021, பிப்ரவரி 2022, மார்ச் 2022 ஆகிய மாதங்களில் முறையே நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட 3 டி20 தொடரில் 9 வெற்றிகளை பதிவு செய்து மொத்தம் 12 வெற்றிகளுடன் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற சாதனையை ஆப்கானிஸ்தான், ருமேனியா ஆகிய அணிகளுடன் இந்தியா பகிர்ந்து கொண்டது.

- Advertisement -

3. அதன் காரணமாக இப்போட்டியில் வென்றால் அந்த உலக சாதனையை முழுமையாக தன் வசமாக்கும் மாபெரும் பொன்னான வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது.

4. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்போட்டியில் கடைசி 5 ஓவரில் வெற்றிக்கு 64 ரன்கள் தேவைப்பட்ட போது ஒரு புறம் டேவிட் மில்லர் அதிரடி காட்டினாலும் மறுபுறம் டுஷன் 30 பந்துகளில் 29* ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தார். அப்போது அவேஷ் கான் வீசிய 16-வது ஓவரின் 2-வது பந்தில் அவர் கேட்ச் கொடுத்தார்.

5. அல்வா போல அழகாக கைக்கு வந்த அந்த கேட்சை இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர் தவற விட்டதை பயன்படுத்திய அவர் அதன்பின் இருமடங்கு அதிரடியாக 75* (46) ரன்களை விளாசி இந்தியாவிற்கு தோல்வியை பரிசளித்தார்.

6. அதன் காரணமாக இந்தியாவின் அந்த முழு உலக சாதனை கனவும் பறிபோனது இந்திய ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. சமீபத்தைய ஐபிஎல் தொடரில் நிறைய இந்திய வீரர்கள் கேட்ச் கோட்டை விட்டதால் தோல்வியடைந்ததை தெரிந்திருந்தும் ஸ்ரேயாஸ் அய்யர் இப்படி செய்தது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.

Advertisement