இந்திய அணியின் பவுலரான இவரை எப்படி சமாளிக்கப்போறோம்னு தெரியல – தெ.ஆ கேப்டன் பவுமா பேட்டி

Bavuma-1
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வந்த பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது நேற்று முன்தினம் அகமதாபாத் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. அதனைத் தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி பிசிசிஐ மூலம் ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

INDvsRSA toss

- Advertisement -

இந்த தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் விரைவில் ஒன்றிணைந்து பயிற்சியில் ஈடு படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. ஜூன் 9ஆம் தேதி துவங்கும் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரானது ஜூன் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் ஏற்கனவே இந்திய அணிக்காக தொடர்ச்சியாக ஓய்வில்லாமல் விளையாடி வரும் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் அசத்திய பல இளம் வீரர்களுக்கு இந்திய அணி வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணியில் பல இளம் வீரர்கள் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் இந்த தொடரில் எவ்வாறு செயல்படப் போகிறார்கள் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந்நிலையில் இந்த டி20 தொடருக்கு முன்னதாக தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா இந்த தொடர் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணிக்கு தற்போது பவுலிங்கில் மிகப்பெரிய சொத்தாக உம்ரான் மாலிக் கிடைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் கண்டறியப்பட்ட இவர் போன்ற அற்புதமான வீரர்களை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்பது தெரியவில்லை.

- Advertisement -

அதிலும் குறிப்பாக உம்ரான் மாலிக்கை சமாளிப்பது என்பது சாதாரண காரியம் கிடையாது. அதற்காக தனியாக பயிற்சியும் நாங்கள் மேற்கொள்ள உள்ளோம். ஏனெனில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் தொடர்ச்சியாக பந்துவீசும் இவரது பந்துகளை சமாளித்து விளையாட எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் எவ்வாறு செயல்படப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. இருப்பினும் அதனை சமாளித்து விளையாடும் வகையில் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க : இப்படி ஒரு கோச் கிடைக்க கொடுத்து வெச்சுருக்கனும் ! கோச்சாக சரித்திர சாதனை படைத்த முன்னாள் இந்திய வீரர்

எங்கள் அணியிலும் 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்துவீசும் பவுலர்கள் இருப்பதனால் நிச்சயம் இந்த தொடர் சுவாரசியமாக இருக்கும். தற்போது உள்ள இந்திய அணியில் உம்ரான் மாலிக் தனித்துவமான திறமை கொண்டவராக இருக்கிறார். நிச்சயம் அவர் சர்வதேச கிரிக்கெட்டிலும் தனது முத்திரையைப் பதிப்பார் என தான் நம்புவதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement