இப்படி ஒரு கோச் கிடைக்க கொடுத்து வெச்சுருக்கனும் ! கோச்சாக சரித்திர சாதனை படைத்த முன்னாள் இந்திய வீரர்

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் சாம்பியன் பட்டத்தை யாருமே எதிர்பாராத வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதல் வருடத்திலேயே வென்று சாதனை படைத்தது. அதற்கு காரணம் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாத நிலையில் சமீப காலங்களில் காயத்தால் பந்து வீசாமல் இந்திய அணியில் தனக்கான இடத்தை இழந்து நின்ற ஹர்திக் பாண்டியா தலைமையில் அந்த அணி களமிறங்கியது. மேலும் ரஷித் கான், முகமது சமி, சுப்மன் கில் என அந்த அணியில் குறைவான நட்சத்திர வீரர்கள் இருந்ததால் இந்த அணி எங்கே கோப்பையை அதுவும் முதல் வருடத்திலேயே வெல்லப் போகிறது என்று ஆரம்பத்தில் பெரும்பாலானவர்கள் கணித்தனர்.

ஆனால் பாண்டியா தலைமையில் ரஷித் கான், டேவிட் மில்லர், ராகுல் திவாடியா என முக்கிய வீரர்கள் முதல் போட்டியிலிருந்தே தேவையான அளவு கச்சிதமாக செயல்பட்டதால் லீக் சுற்றில் எதிரணிகளை மிரட்டிய அந்த அணி பங்கேற்ற 14 போட்டிகளில் 10 வெற்றிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அதோடு நிற்காமல் நாக்-அவுட் சுற்றில் குவாலிஃபயர் 1 போட்டியில் கொஞ்சம் கூட தடுமாறாமல் வென்று நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அந்த அணி மே 29இல் நடந்த மாபெரும் இறுதிப் போட்டியில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் வருடத்திலேயே அதுவும் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் கோப்பையை வென்று அத்தனை கணிப்புகளையும் பொய்யாக்கி சாதனை படைத்தது.

- Advertisement -

குரு ஆசிஷ் நெஹ்ரா:
அந்த அணியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஒரு ஆல்ரவுண்டராக அசத்த சுப்மன் கில், சஹா, டேவிட் மில்லர், ராகுல் திவாடியா ஆகியோர் பேட்டிங்கில் மிரட்டினர். அதேபோல் பந்துவீச்சில் ரசித் கான், முகமது சமி போன்றவர்கள் அட்டகாசமாக செயல்பட்டதே இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாகும். ஆனால் இந்த வெற்றிக்கு மொத்த அணியையும் ஒரு தலைமை பயிற்சியாளராக தனது எளிமையான ஆலோசனைகளாலும் அணுகுமுறைகளாலும் கட்டுக்கோப்பாக வழிநடத்திய முன்னாள் இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆசிஸ் நெஹ்ரா மிகப்பெரிய பாராட்டுக்குரியவர் ஆவார்.

பொதுவாக பயிற்சியாளர்கள் என்றால் கம்ப்யூட்டர், லேப்டாப் போன்ற நவீன டெக்னாலஜியை பயன்படுத்தி பிளான் போடுவார்கள். அதேபோல் பயிற்சிக்காக நேரமே எழுந்திருக்க வேண்டும், நேரம் தவறாமையை கடைப்பிடிக்க வேண்டும் என்று வீரர்களிடம் கடுமையாக நடந்து கொள்வார்கள். அதைவிட ஒரு போட்டியில் ஒரு வீரர் சாதனை சொதப்பினால் டீம் மீட்டிங் போட்டு கேள்வி மேல் கேள்வி கேட்டு வறுத்தெடுத்து விடுவார்கள்.

- Advertisement -

கொடுத்து வெச்சுருக்கணும்:
ஆனால் இவரோ வரலாற்றிலிருந்த அத்தனை பயிற்சிகளுக்கும் விதிவிலக்காக ஒரு பள்ளி வயது சிறுவனைப் போல சாதாரண ரஃப் பேப்பரில் அணியின் வெற்றிக்கான திட்டங்களை வகுத்தார். அதேபோல் ஒரு போட்டி முடிந்த பின் அடுத்த நாள் சீக்கிரம் பயிற்சிக்கு வரவேண்டுமென்று வீரர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல் “ரிலாக்சாக தூங்கி ஓய்வெடுங்கள் அப்போதுதான் அடுத்த போட்டியில் சிறப்பாக புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும்” என்று டீம் மீட்டிங்கில் பேசினார்.

அத்துடன் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற முடியாது என்ற சூழ்நிலையில் ஒருசில போட்டிகளில் வீரர்கள் தடுமாறினாலும் அவர்களை திட்டாமல் நண்பனைப் போல அவர்களுடன் அமர்ந்து மனம் விட்டு பேசி சுதந்திரமாக செயல்பட ஆதரவு கொடுத்தார். மேலும் இதர பயிற்சியாளர்களை போல மிடுக்குடன் உடைகளை அணியாமல் தொப்பியை திருப்பி அணிந்துகொண்டு எளிமையான உடைகளுடன் மேற்குறிப்பிட்ட அவரின் அத்தனை பயிற்சி கொடுக்கும் விதங்களும் ஸ்டைல்களும் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.

- Advertisement -

சரித்திர சாதனை:
குறிப்பாக தற்போது குஜராத் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதித்துள்ள நிலையில் அந்த அணியின் வெற்றிக்கு இவரின் எளிமையான பயிற்சி தான் முக்கிய காரணம் என்று பாராட்டும் ரசிகர்கள் இப்படி ஒரு பயிற்சியாளர் கிடைக்க குஜராத் வீரர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் மெய் சிலிர்க்கின்றனர். ஐபிஎல் என்றாலே பெரும்பாலான அணிகள் வெளிநாட்டு பயிற்சியாளர்களை தான் விரும்புகின்றன. அதன் காரணமாக இதுவரை வெளிநாட்டு பயிற்சியாளர்கள் தலைமை வகித்த அணிகள்தான் கோப்பையை வென்றுள்ளன.

ஆனால் இப்போது ஆசிஸ் நெஹ்ரா தலைமையில் குஜராத் கோப்பையை வென்றுள்ளதால் ஐபிஎல் வரலாற்றில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய தலைமை பயிற்சியாளர் என்ற சரித்திர சாதனையை அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. 2008 – ராஜஸ்தான் (ஷேன் வார்னே, கேப்டன்+பயிற்சியாளர்)
2. 2009 – டெக்கான் (டேரன் லிமன்)
3. 2010 – சென்னை (ஸ்டீபன் பிளெமிங்)
4. 2011 – சென்னை (ஸ்டீபன் பிளெமிங்)
5. 2012 – கொல்கத்தா (ட்ரேவர் பெய்லிஸ்)
6. 2013 – மும்பை (ஜான் ரைட்)
7. 2014 – கொல்கத்தா (ட்ரேவர் பெய்லிஸ்)

இதையும் படிங்க : தோனி மாதிரி கேப்டன்ஷிப் பண்ணாரு – முதல் சீசனிலேயே பாண்டியாவுக்கு கிடைத்த – முன்னாள் வீரரின் பாராட்டு

8. 2015 – மும்பை (ரிக்கி பாண்டிங்)
9. 2016 – ஹைதெராபாத் (டாம் மூடி)
10. 2017 – மும்பை (மகிளா ஜெயவர்தனே)
11. 2018 – சென்னை (ஸ்டீபன் பிளெமிங்)
12. 2019 – மும்பை (மகிளா ஜெயவர்தனே)
13. 2020 – மும்பை (மகிளா ஜெயவர்தனே)
14. 2021 – சென்னை (ஸ்டீபன் பிளெமிங்)
15. 2022 – குஜராத் (ஆசிஷ் நெஹ்ரா)*

Advertisement