தோனி மாதிரி கேப்டன்ஷிப் பண்ணாரு – முதல் சீசனிலேயே பாண்டியாவுக்கு கிடைத்த – முன்னாள் வீரரின் பாராட்டு

Hardik Pandya MS DHoni GT vs CSK
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்து கடந்த 2 மாதங்களாக பரபரப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் 2022 தொடர் மாபெரும் நிறைவு விழாவுடன் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் கலக்கிய குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று மே 29-ஆம் தேதியன்று கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின. அஹமதாபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் பந்துவீச்சில் ராஜஸ்தானை மடக்கிப் பிடித்த குஜராத் 131 ரன்கள் இலக்கை எளிதாக துரத்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன் வாயிலாக தனது முதல் வருடத்திலேயே அதுவும் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் கோப்பையை வென்ற அந்த அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

Gujarat Titans GT Champ

- Advertisement -

இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்ட அந்த அணிக்கு 15 கோடிக்கு வாங்கப்பட்ட நட்சத்திர இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்ட போது பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறுவது கடினம் என்று அனைவரும் நினைத்தனர். ஏனெனில் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத பாண்டியா சமீப காலங்களில் பந்து வீசாமல் பேட்டிங்கிலும் சுமாராக செயல்பட்டு இந்திய அணியில் தனக்கான இடத்தை இழந்து நின்றார்.

கலக்கல் பாண்டியா:
ஆனால் ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஒரு மாத காலங்கள் கடினமான பயிற்சி எடுத்த அவர் இதற்கு முன் இந்தியாவிற்காகவும் மும்பைக்காகவும் மிடில் ஆர்டரில் விளையாடி வந்த நிலையில் கேப்டனாக பொறுப்பேற்றதும் பேட்டிங்கில் 3, 4 ஆகிய இடங்களில் களமிறங்கி தனது அணி சரியும் போதெல்லாம் அதிரடியாக பேட்டிங் செய்து தாங்கிப் பிடித்தார். அதேபோல் காயத்திலிருந்து குணமடைந்த அவர் பந்து வீச்சில் முகமது சமி போன்ற இதர பவுலர்கள் சுமாராக செயல்படும் போது அதை ஈடுகட்டும் வகையில் தேவையான நேரத்தில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார்.

Pandya

இந்த வருடம் மொத்தம் 15 இன்னிங்சில் 4 அரைசதங்கள் உட்பட 487 ரன்களை 44.27 என்ற சிறப்பான சராசரியில் 131.27 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் குவித்த அவர் பந்து வீச்சில் 10 இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை 7.28 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக தனது அணியில் விளையாடும் இதர வீரர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார். குறிப்பாக அழுத்தம் நிறைந்த மாபெரும் பைனலில் பந்துவீச்சில் மிரட்டிய அவர் 3 விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் 34 ரன்களையும் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்று குஜராத்தின் நம்பிக்கை நாயகனாக அசத்தினார்.

- Advertisement -

தோனி மாதிரி:
அதேபோல் ரஷித் கான், முகமது சமி, சஹா, டேவிட் மில்லர் போன்ற நட்சத்திர மூத்த வீரர்களுக்கு தொடர்ச்சியான ஆதரவளித்து அவர்களின் சிறந்த திறமையை வெளிப்படுத்தும் வகையில் வழிநடத்திய அவர் சுப்மன் கில், ராகுல் திவாடியா, சாய் கிஷோர், யாஷ் தயாள் போன்ற இளம் வீரர்களுக்கும் வாய்ப்பளித்து சிறப்பாக செயல்படும் அளவுக்கு சுதந்திரத்தை கொடுத்து ஒரு கேப்டனாகவும் அசத்தினார். அதனால் இந்திய அணியில் மீண்டும் வலுவான இடத்தைப் பிடித்துள்ள அவர் வரும் காலங்களில் கேப்டனாகும் அளவுக்கு தன்னை நிரூபித்துள்ளார்.

Sanjay

இந்நிலையில் நட்சத்திர இந்திய கேப்டன் தோனியை போல இந்த வருடம் பாண்டியா மிகச்சிறப்பாக கேப்டன்ஷிப் செய்ததாக முன்னாள் இந்திய வீரர் மஞ்ச்ரேக்கர் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய அவர் பேசியது பின்வருமாறு. “ஹர்திக் பாண்டியா சிறப்பாக பந்து வீசினார். அதே போல் பேட்டிங்கில் முக்கியமான 4-வது இடத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். கேப்டன்ஷிப் செய்வதில் தோனியை போல் ஜொலித்தார். பைனலில் சாய் கிசோரை 16, 18 ஆகிய ஓவர்களை வீச வைத்தார். அவர் தோனியை போலவே களத்தில் அந்த குறிப்பிட்ட நிமிடத்தில் ஏற்படும் சூழ்நிலைக்கேற்ப முடிவுகளை எடுக்கிறார். மேலும் அவர் கேப்டன் பொறுப்பை மிகவும் மகிழ்ச்சியுடன் செய்வதைப் போல் காட்சியளிக்கிறார்” என்று பேசினார்.

- Advertisement -

பொதுவாக எம்எஸ் தோனி மிகப்பெரிய அழுத்தம் நிறைந்த போட்டிகளில் கூட ஜோஹிந்தர் சர்மா போன்ற அனுபவம் இல்லாத இளம் வீரர்களிடம் அதுவும் கடைசி கட்டத்தில் நம்பி பந்துவீச கொடுப்பார்.

pandya

அதேபோல் இறுதிப் போட்டியில் கடைசி கட்டத்தில் அனுபவம் இல்லாத போதிலும் தமிழக வீரர் சாய் கிசோரிடம் பந்துவீச வழங்கியதாக பாண்டியாவை பாராட்டும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தோனியை போலவே கேப்டன்ஷிப் வேலையை கோபப்படாமல் ரிலாக்சாக மகிழ்ச்சியுடன் செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : கோப்பையை ஏலத்தில் வாங்க முடியாது. குஜராத்தை பாராட்டி மும்பையை குத்தி காட்டிய – முன்னாள் வீரர்

இதற்குமுன் மும்பை அணிக்காக சாதாரண ஆல்-ரவுண்டராக செயல்பட்ட அவர் அனுபவம் இல்லாத போதிலும் முதல் வருடத்திலேயே அட்டகாசமாக கேப்டன்ஷிப் செய்தது பிரமிப்பாக உள்ளதாகவும் அவர் பாராட்டினார்.

Advertisement