- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட், ரோஹித் இந்தியாவை பயமற்ற அணியாக மாத்துனாங்க.. தெ.ஆ பிட்ச் பாத்து ஆச்சர்யப்படாது.. பவுமா பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விடப்பட்டு வருகின்றனர். கடந்த 15 வருடங்களாக 3 விதமான கிரிக்கெட்டிலும் விளையாடிய அவர்கள் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளனர். அதில் விராட் கோலி 27000+ ரன்கள் 82 சதங்கள் அடித்து வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்து இந்தியாவிற்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் மற்றும் அதிகபட்ச ஸ்கோர் போன்ற பல சாதனைகளை படைத்துள்ள ரோஹித் சர்மா இந்தியாவின் கேப்டனாக 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபிகளை வென்றுள்ளார். அதனால் நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாக கருதப்படும் அவர்கள் டெஸ்ட், டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டனர்.

- Advertisement -

பயமற்ற இந்திய அணி:

இனிமேல் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடப் போகும் அவர்களை பிசிசிஐ 2027 உலகக்கோப்பையில் கழற்றி விட தயாராகி வருகிறது. இந்நிலையில் விராட், ரோஹித் இந்தியாவை பயமற்ற அணியாக மாற்றியதாக தென்னாப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா பாராட்டியுள்ளார். அடுத்த மாதம் இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்கா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சுழலுக்கு சாதகமான பிட்ச்கள் அமைக்கப்பட்டால் தாங்கள் ஆச்சரியப்பட மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதை சமாளித்து வெற்றி பெற முயற்சிப்போம் என்று தெரிவிக்கும் பவுமா இது பற்றி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு. “இந்திய கிரிக்கெட்டில் புதிய சகாப்தம் துவங்கியுள்ளது என்று நான் சொல்வேன். தற்போது ரோஹித் அதற்கு முன் விராட் கோலி தங்களுடைய வேலையை செய்தனர். அவர்கள் இந்தியாவை கம்பளத்தில் வைத்தனர்”

- Advertisement -

பவுமா பாராட்டு:

“அவர்கள் இந்திய அணியை உண்மையிலேயே பயப்பட வேண்டிய அணியாக மாற்றியுள்ளனர். அதனால் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் என்பதை உறுதியாக சொல்வேன். அவர்களை அதிகம் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக்கூடாது என்பதே தென்னாப்பிரிக்கா அணியாக எங்களுடைய வேலை. இந்திய அணியில் புதிய கேப்டன்ஷிப் வந்துள்ளது. இந்தியாவில் நானும் முதல் முறையாக டெஸ்ட் கேப்டனாக செயல்பட உள்ளேன்”

இதையும் படிங்க: 2 மாதங்களில் 20 கிலோ எடையை குறைத்த ரோஹித் சர்மா.. வியக்க வைத்த ஹிட்மேன் – இதுதான் பிளானா?

“அது டெஸ்ட் கிரிக்கெட்டை அழகாக்கும். இந்தியாவில் வழக்கம் போல சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்பட்டிருந்தால் அதற்காக நாங்கள் ஆச்சரியப்பட மாட்டோம். ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கருத்தில் கொண்டு அந்தந்த நாடுகள் தங்களது சொந்த மண்ணில் சாதகமான சூழ்நிலைகளை பயன்படுத்துகின்றன. அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. இந்தியாவில் இந்திய மற்றும் வெளிநாட்டு ஸ்பின்னர்கள் பந்து வீசுவதில் வித்தியாசம் இருக்கும். வெளிநாட்டு ஸ்பின்னர்கள் இங்குள்ள சூழ்நிலைகளுக்கு தங்களை மாற்றி அமைப்பதே சவாலாக இருக்கும்” என்று கூறினார்.

- Advertisement -