
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக பதவியேற்ற தெம்பா பவுமா தலைமையின் கீழ் அந்த அணி தொடர்ச்சியாக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கடந்த சுழற்சியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடிய அந்த அணி அவரின் மிகச் சிறப்பான ஆட்டம் காரணமாக இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று முதல் முறையாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று அசத்தியிருந்தது.
பின்னர் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தென்னாப்பிரிக்க அணி அங்கும் பாகிஸ்தான் அணிக்கெதிரான சிறப்பாக செயல்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி இங்கு நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
அந்த வகையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் தெம்பா பாவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தி அசத்தியது.
அதிலும் குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளில் இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்க அணி ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெறாத வேளையில் தற்போது தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி இந்த வெற்றியை பதிவு செய்து வரலாறு படைத்துள்ளது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணிக்காக தெம்பா பவுமா கேப்டனாக ஒரு மாபெரும் சாதனையை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் போட்டிகளில் தோல்வியே சந்திக்கவில்லை என்பது தான் அந்த சாதனை. அவரது கேப்டன்சியின் கீழ் தென்னாப்பிரிக்கா அணியானது மொத்தம் 11 போட்டிகளில் விளையாடி 10 வெற்றிகளையும் ஒரு டிராவையும் சந்தித்துள்ளது.
இதையும் படிங்க : கழுத்து வலியால் பாதிக்கப்பட்டுள்ள கேப்டன் சுப்மன் கில் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? – வெளியான தகவல்
இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் தோல்வியையே சந்திக்காமல் 10 போட்டிகளை வேகமாக வெற்றி பெற்ற கேப்டன் என்ற சாதனையையும் தெம்பா பவுமா நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் நவம்பர் 22-ஆம் தேதி கவுகாத்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது.