ஆஸி அந்த வார்த்தையை சொல்லி ஸ்லெட்ஜ் பண்ணாங்க.. எல்லாருக்கும் பதிலடி கொடுத்துட்டோம்.. பவுமா பெருமிதம்

Temba Bavuma 2
- Advertisement -

ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 11ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோற்கடித்தது. அதனால் 27 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஒரு ஐசிசி கோப்பையை வென்று தென்னாப்பிரிக்கா சாதனை படைத்தது.

அப்போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 212 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தென்னாபிரிக்கா 138 ரன்கள் மட்டுமே எடுத்ததால் மீண்டும் தோல்வியை சந்திக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். இருப்பினும் 2வது இன்னிங்ஸில் 74 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய ஆஸ்திரேலியாவை சிறப்பாக பவுலிங் செய்த தென்னாப்பிரிக்கா 207 ரன்களுக்கு சுருட்டியது.

- Advertisement -

ஸ்லெட்ஜ் செய்த ஆஸ்திரேலியா:

இறுதியில் 282 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் அற்புதமான சதத்தை அடித்து 136, கேப்டன் பவுமா 66 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தனர். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய சாம்பியனாக தென்னாப்பிரிக்கா சாதனை படைத்தது. அவை அனைத்தையும் விட காலம் காலமாக ஐசிசி தொடர்களில் சந்தித்த தொடர்ச்சியான தோல்விகளால் சுமந்து வந்த “சோக்கர்” என்ற பட்டத்தையும் தென்னாப்பிரிக்கா உடைத்துள்ளது என்றே சொல்லலாம்.

- Advertisement -

இந்நிலையில் ஃபைனலில் 4வது நாள் காலையில் பேட்டிங் செய்ய வந்த போது தம்மை சோக்கர் என்று சொல்லி ஒரு ஆஸ்திரேலிய வீரர் ஸ்லெட்ஜ் செய்ததாக கேப்டன் தெம்பா பவுமா கூறியுள்ளார். அவருடைய பெயரை வெளியிட விரும்பாத பவுமா இனிமேல் தென்னாப்பிரிக்காவை யாரும் சோக்கர் என்று சொல்ல மாட்டார்கள் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “காலையில் பேட்டிங் செய்து கொண்டிருந்த நேரத்தில் ஆஸ்திரேலியர்கள் சோக் என்ற வார்த்தையை உபயோகித்ததை நாங்கள் கேட்டோம்”

பவுமா பதிலடி:

“சோக்கர் என்ற எங்களுடைய பட்டம் அன்றைய நாள் காலையில் வந்தது. நாங்கள் ஆல் அவுட்டாகாத போதிலும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பவுலர்களில் ஒருவர் அந்த வார்த்தையை எங்கள் மேலே எறிந்தார். அதை நான் கண்டிப்பாக கேட்டேன். இருப்பினும் பல வருடங்கள் கழித்து நாங்கள் இறுதிப்போட்டியை தாண்டி வரலாற்றை எழுதியுள்ளோம்”

இதையும் படிங்க: இங்கிலாந்தில் 20/4ன்னு இந்தியா சரியும் போது கில் இந்த டெக்னிக்கை ஃபாலோ பண்ணனும்.. கங்குலி அட்வைஸ்

“தற்போது நாங்கள் இதற்கு முன்பு செய்யாத ஒன்றில் அங்கமாக இருக்கிறோம். சோக்கர் என்றப் பெயரை மீண்டும் கேட்காமல் இருப்பது சிறப்பாக இருக்கும். அதற்கான வேலையை செய்து அந்தப் பெயரை நீக்கியது எங்களுடைய அணிக்கு மிகப்பெரிய விஷயமாகும்” என்று கூறினார். அப்படி ஸ்லெட்ஜிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு 1996 உலகக் கோப்பைக்கு பின் ஐசிசி இறுதிப்போட்டியில் தோல்வியை பரிசளித்த அணியாக தென்னாப்பிரிக்கா சாதனை படைத்துள்ளது.

Advertisement