இங்கிலாந்தில் 20/4ன்னு இந்தியா சரியும் போது கில் இந்த டெக்னிக்கை ஃபாலோ பண்ணனும்.. கங்குலி அட்வைஸ்

Sourav ganguly
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி முதல் துவங்குகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக துவங்கும் அத்தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது. இம்முறை விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற அனுபவ வீரர்கள் ஓய்வு காரணமாக விளையாடப் போவதில்லை.

எனவே இம்முறையும் சவாலான இங்கிலாந்து மண்ணில் இளம் இந்திய அணி வெற்றி பெறுவது கடினமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் வேகம், ஸ்விங், பவுன்ஸ் ஆகியவற்றுக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும். அந்த சூழ்நிலைகளைப் பயன்படுத்தி இங்கிலாந்து பவுலர்கள் புதிய பந்தை ஸ்விங் செய்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரிய அச்சுறுத்தலைக் கொடுப்பார்கள்.

- Advertisement -

இந்தியா சரியும் போது:

அதனால் 10/2 அல்லது 20/4 என இந்திய அணி ஆரம்பத்திலேயே தடுமாறக்கூடிய சூழ்நிலைகள் வரும் என்று ஜாம்பவான் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். அது போன்ற சூழ்நிலைகளில் கேப்டன் சுப்மன் கில் பொறுப்புடன் விளையாடுவதற்காக சில பேட்டிங் குறிப்புகளை அவர் பகிர்ந்துள்ளார். இது பற்றி சௌரவ் கங்குலி பேசியது பின்வருமாறு.

“சுப்மன் கில்லுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தன்னுடைய டெஸ்ட் மேட்ச் பேட்டிங்கில் வேலை செய்திருப்பார் என்று நம்புகிறேன். அவர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். இங்கிலாந்து சூழ்நிலைகளில் நீங்கள் லைனை மட்டும் பிடித்து பந்தை அடிக்க முடியாது. அங்கே ஸ்விங், வேகம் ஆகியவை இருக்கும். புதிய பந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்”

- Advertisement -

கங்குலி அட்வைஸ்:

“அதன் காரணமாக 10/2 என இந்தியா தடுமறக்கூடிய நேரங்கள் வரலாம். அப்போது வந்து விளையாடப் போகும் அவர் புதிய பந்தை எதிர்கொள்வதற்கு வித்தியாசமானதாக பயன்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும். வேகம், ஸ்விங் ஆகக்கூடிய சூழ்நிலைகளில் சுப்மன் கில் கொஞ்சம் அதிகம் ரன்கள் அடிக்க வேண்டும். புதிய பந்தை முன்னோக்கி சென்று எதிர்கொள்வது கடினமாக இருக்கும்”

இதையும் படிங்க: 2026 டி20 உ.கோ முன்னிட்டு நியூஸி’க்கு எதிராக இந்தியா விளையாடும் 2 புதிய தொடர்கள்.. அட்டவணை வெளியீடு

“100/2 மற்றும் 20/4 ஆகிய 2 வெவ்வேறு சூழ்நிலைகளில் பேட்டிங் செய்வது வித்தியாசமானது. அதை சமாளிக்க அவரிடம் நல்ல தடுப்பாட்டம் இருக்க வேண்டும். எப்படி அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை அடிக்காமல் விடலாம் என்பதையும் அவர் கற்றிருக்க வேண்டும். இம்முறை ரோகித், விராட், ரகானே போன்ற அனுபவத்தைக் கொண்டவர்கள் இல்லை. காலம் எப்படி வேகமாக மாறுகிறது என்பதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது” எனக் கூறினார்.

Advertisement