இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட தயாராகி வருகிறது. அத்தொடரில் முடித்துக் கொண்டு தாயகம் திரும்பும் இந்தியா அடுத்ததாக வங்கதேசத்துக்கு சுற்றுபயணம் மேற்கொள்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கும் அந்த சுற்றுப்பயணத்தில் இந்தியா 3 ஒருநாள் மற்றும் 3 டி20 தொடர்களில் விளையாட உள்ளது.
அதன் பின் தங்களுடைய சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அதன் பின் தங்களுடைய சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது.
புதிய 2 தொடர்கள்:
இந்நிலையில் அந்தத் தொடருக்குப் பின் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. குறிப்பாக 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் வென்ற இந்தியா தற்போது உலக சாம்பியனாக திகழ்கிறது.
எனவே 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் நடப்புச் சாம்பியனாக களமிறங்க உள்ளது. அந்தத் தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கி இந்தியா சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் லட்சியத்துடன் விளையாட உள்ளது. அதற்கு தயாராக உதவும் வகையில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா சொந்த மண்ணில் 5 டி20 போட்டிகளில் விளையாடும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
அட்டவணை வெளியீடு:
2026 புத்தாண்டில் இந்திய அணி விளையாடும் அந்த முதல் சுற்றுப்பயணத்திற்கான அட்டவணையை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அட்டவணை பின்வருமாறு.
ஜனவரி 11 மதியம் 1.30: முதல் ஒன்டே, வதோதரா
ஜனவரி 14 மதியம் 1.30: 2வது ஒன்டே, ராஜ்கோட்
ஜனவரி 18 மதியம் 1.30: 3வது ஒன்டே, இந்தூர்
இதையும் படிங்க: 8 வருஷம் வெய்ட் பண்ணுங்க பாக்கலாம்.. இந்தியாவை நிராகரித்த ஐசிசி.. இங்கிலாந்துக்கு ஹாட்ரிக் ஜாக்பாட்
ஜனவரி 21, இரவு 7 மணி: முதல் டி20, நாக்பூர்
ஜனவரி 23, இரவு 7 மணி: 2வது டி20, ராய்ப்பூர்
ஜனவரி 25, இரவு 7 மணி: 3வது டி20, கௌஹாத்தி
ஜனவரி 28, இரவு 7 மணி: 4வது டி20, விசாகப்பட்டினம்
ஜனவரி 31, இரவு 7 மணி: 5வது டி20, திருவனந்தபுரம்



