10க்கு 9.. தெ.ஆ கேப்டன் பவுமா 99 வருட உலக சாதனை.. தோனி, கோலி, பாண்டிங்கால் முடியல

Temba Bavuma
- Advertisement -

ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா தோற்கடித்தது. அதனால் தெம்பா பவுமா தலைமையில் உலகின் புதிய டெஸ்ட் சாம்பியனாக தென்னாப்பிரிக்கா சாதனை படைத்தது. அத்துடன் 27 வருடங்கள் கழித்து ஐசிசி கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்கா தங்களைச் சோக்கர் என்று கிண்டல் அடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

அந்த வெற்றிக்கு இறுதிப்போட்டியில் 282 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு 136 ரன்களை அடித்து முக்கிய பங்காற்றிய ஐடன் மார்க்ரம் ஆட்டநாயகன் விருதை வென்றார். அவரை விட கேப்டன் பவுமா வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார் என்றே சொல்லலாம். ஏனெனில் முதல் இன்னிங்சில் 67/4 என தென்னாப்பிரிக்கா சரிந்த போது நங்கூரத்தை போட்ட அவர் 36 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

கேப்டன் பவுமா:

2வது இன்னிங்ஸில் மீண்டும் நங்கூரமாக விளையாடிய அவர் அரை சதத்தை அடித்து 66 ரன்கள் குவித்து வரலாற்று வெற்றிக்கு வித்திட்டார். இவை அனைத்தையும் விட கேப்டனாக பவுமா இதுவரை மொத்தம் 10 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக தென்னாப்பிரிக்காவை வழி நடத்தியுள்ளார். அவருடைய தலைமையில் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் உட்பட தென்னாபிரிக்கா மொத்தம் 9 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

1 போட்டி ட்ராவில் முடிவடைந்தது. அவருடைய தலைமையில் விளையாடிய 10 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா ஒரு தோல்வியை கூட பெற்றதில்லை. அதன் இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தம்முடைய முதல் 10 போட்டிகளில் தோல்வியே சந்திக்காத முதல் கேப்டன் என்ற உலக சாதனையை தெம்பா பவுமா படைத்துள்ளார்.

- Advertisement -

லார்ட் பவுமாவின் மாஸ்:

இதற்கு 1926 – 1930 காலகட்டங்களில் இங்கிலாந்தின் கேப்டனாக செயல்பட்ட பெர்சி சாப்மேன் தம்முடைய முதல் 10 போட்டிகளில் 9 வெற்றிகளைப் பெற்ற போதிலும் 1 தோல்வியைப் பதிவு செய்தார். தற்போது 10 போட்டிகளில் தோல்வியை சந்திக்காத பும்ரா அவருடைய 99 வருட சாதனையை உடைத்துள்ளார். நவீன கிரிக்கெட்டில் இந்திய ஜாம்பவான் தோனி தன்னுடைய 10 போட்டிகளில் தோல்வியை சந்திக்காத போதிலும் 5 வெற்றி 5 டிராவை பதிவு செய்தார்.

இதையும் படிங்க: அதுக்காக விராட் கோலி என்கிட்ட 6 மாசம் பேசல.. 2024இல் தெரியாம உளறிய தவறு பற்றி ஏபிடி

வெற்றிகரமான இந்திய மற்றும் ஆசிய கேப்டனாக சாதனை படைத்துள்ள விராட் கோலி தனது முதல் 10 போட்டிகளில் 6 வெற்றிகள், 3 தோல்வி, 1 ட்ராவை சந்தித்தார். ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் உட்பட மகத்தான கேப்டன்கள் யாருமே இப்படிப்பட்ட சாதனையைப் படைத்ததில்லை. இதைப் பார்க்கும் ரசிகர்கள் லார்ட் பவுமா மாஸ் காட்டுவதாக சமூக வலைதளங்களில் பாராட்டுகிறார்கள்.

Advertisement