அதுக்காக விராட் கோலி என்கிட்ட 6 மாசம் பேசல.. 2024இல் தெரியாம உளறிய தவறு பற்றி ஏபிடி

Ab de villiers
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் விராட் கோலி மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் சிறந்த நண்பர்களாக அறியப்படுகிறார்கள். ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக நிறைய வருடங்கள் இணைந்து விளையாடியதால் அவர்களுக்கிடையே நல்ல நட்பு ஏற்பட்டது. அதன் காரணமாக விராட் கோலி தம்முடைய தனிப்பட்ட விஷயங்களை அவருடன் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

சொல்லப்போனால் 18 வருடங்கள் காத்திருந்து வென்ற ஐபிஎல் கோப்பையை அவருடன் சேர்ந்து விராட் கோலி கொண்டாடினார். அந்தளவுக்கு விராட் கோலி மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ் நட்புக்கு உதாரணமாக திகழ்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த 2024ஆம் ஆண்டு இந்தியா தங்களது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

- Advertisement -

உளறிய நண்பன்:

அந்தத் தொடரில் தம்முடைய சொந்தக் காரணங்களுக்காக விராட் கோலி விளையாடாமல் விலகுவதாக அறிவித்தார். அப்போது நாட்டுக்காக சொந்த மண்ணில் விளையாடுவதை விட வேறு சொந்தக் காரணம் இருக்க முடியுமா? என்று விராட் கோலி மீது விமர்சனங்கள் எழுந்தன. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஏபி டீ வில்லியர்ஸ் “விராட் கோலி தம்முடைய 2வது குழந்தை பிறப்பதைப் பார்ப்பதற்காக சென்றதாலேயே விளையாடவில்லை” என்று விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

அந்த வகையில் நண்பனுக்கு ஆதரவு தருகிறேன் என்ற பெயரில் விராட் கோலி மறைத்து வைத்திருந்த ரகசியத்தை ஏபி டீ வில்லியர்ஸ் உலகிற்கு அம்பலப்படுத்தினார். அதனால் அவரைத் தொடர்பு கொண்ட விராட் கோலி அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தெரிகிறது. அதன் காரணமாக அடுத்த நாளே தாம் சொன்னது உண்மைல்ல என்று ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

6 மாசம் பேசல:

இந்நிலையில் அந்த விவகாரத்தால் விராட் கோலி தம்மிடம் 6 மாதம் பேசாமல் இருந்ததாக டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் ஒரே படகில் இருக்கிறோம் என்பது தெரியும். ஏனெனில் நாங்கள் பேசியுள்ளோம். கடந்த 6 மாதங்களாகத் தான் அவர் என்னுடன் தொடர்பில் இருக்கிறார். நன்மைக்கு நன்றி. ஏனெனில் அவர் தம்முடைய 2வது குழந்தையை எதிர்பார்த்திருந்த போது நான் கால்பந்து விளையாடி நீண்ட காலமாகவில்லை”

இதையும் படிங்க: ஆஸ்திரேலியா இப்படி மோசமாக தோக்க ஐ.பி.எல் தான் காரணம்.. அதில் அந்த 4 பேரை நம்பக்கூடாது – மிட்சல் ஜான்சன் விமர்சனம்

“அதனால் விராட் கோலி மீண்டும் என்னிடம் பேசத் துவங்கிய போது நான் நிம்மதியடைந்தேன்” என்று கூறினார். அத்துடன் 2018ஆம் ஆண்டு தாம் ஓய்வு பெற்ற பின்னணிகளை விராட் கோலியுடன் பகிர்ந்து கொண்டதாகவும் டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். அதைப் பின்பற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி அறிவித்த ஓய்வு முடிவுக்கு தாம் 100% ஆதரவளிப்பதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement