ஆஸ்திரேலியா இப்படி மோசமாக தோக்க ஐ.பி.எல் தான் காரணம்.. அதில் அந்த 4 பேரை நம்பக்கூடாது – மிட்சல் ஜான்சன் விமர்சனம்

Mitchell Johnson
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்று முடிந்தது. கடந்த ஜூன் 11-ம் தேதி துவங்கிய இந்த போட்டியானது நேற்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்கா அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

ஆஸ்திரேலிய அணியின் இந்த நிலைமைக்கு ஐ.பி.எல் தான் காரணம் : மிட்சல் ஜான்சன்

ஏற்கனவே இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனாக நுழைந்த ஆஸ்திரேலிய அணி எளிதில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர்கள் அடைந்த இந்த தோல்வி அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்த தோல்வியை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்தும் வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஜான்சன் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்ததற்கு பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவது தான் காரணம் என்று ஜான்சன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இனி ஆஸ்திரேலியா அணியில் ஸ்டார்க், கம்மின்ஸ், லயன் மற்றும் ஹேசல்வுட் ஆகிய நால்வரையும் வெற்றிகரமான நால்வர் என யாரும் சொல்லக்கூடாது. சமீபகாலமாகவே ஹேசல்வுட் உடற்தகுதி இன்றி அடிக்கடி காயத்தில் சிக்கி வருவதை நாம் பார்த்துள்ளோம். இந்நிலையில் அவர் தனது உடற்தகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஐபிஎல் தொடருக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார்.

- Advertisement -

அதேபோன்று நாதன் லயனின் பந்துவீச்சு இந்த போட்டியில் எங்குமே கை கொடுக்கவில்லை. மேலும் பேட் கம்மின்ஸ், ஸ்டார்க் என அனைவருமே விக்கெட்டை வீழ்த்த மிகவும் தடுமாறு இருந்தனர். இதன் காரணமாக இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட தகுதியான நபர்களுக்கு ஆஸ்திரேலிய அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

இதையும் படிங்க : வாங்குன அடி சும்மாவா.. 6 மாதங்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாதாம் – ஸ்டீவ் ஸ்மித்தின் பரிதாப நிலை

அதேபோன்று ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு புதிய துவக்க வீரர்களையும், மூன்றாவது இடத்திற்கு சரியான பேட்ஸ்மேனையும் கண்டுபிடிக்க வேண்டும் என மிட்சல் ஜான்சன் ஆஸ்திரேலிய அணியை விமர்சித்து கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement