வாங்குன அடி சும்மாவா.. 6 மாதங்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாதாம் – ஸ்டீவ் ஸ்மித்தின் பரிதாப நிலை

Steve Smith
- Advertisement -

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த ஜூன் 11-ஆம் தேதி துவங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. அந்த வகையில் நடைபெற்று முடிந்த அந்த இறுதிப்போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணி நான்காவது நாளான நேற்று ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி அசத்தியது.

ஸ்டீவ் ஸ்மித் குணமடைய 6 மாதங்கள் ஆகும் :

இதன்மூலம் கடந்த பல ஆண்டுகளாகவே ஐசிசி கோப்பைக்காக காத்திருந்த தென்னாப்பிரிக்க அணியின் நீண்ட ஆண்டுகால ஏக்கம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த போட்டியின் போது தென்னாப்பிரிக்க அணி சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க்கம் ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார்.

- Advertisement -

அதே வேளையில் இந்த போட்டியின் போது விளையாடியிருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் காயமடைந்து போட்டியின் பாதியிலேயே வெளியேறியிருந்தார். தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் தெம்பா பவுமா அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்ற போது ஸ்லிப் திசையில் நின்றிருந்த ஸ்டீவ் ஸ்மித் பந்தை சரியாக கணிக்க தவறி சுண்டு விரலில் காயம் அடைந்தார்.

பந்து பட்டதுமே வலியால் துடித்த அவரை உடனடியாக மருத்துவ ஊழியர்கள் மைதானத்திற்குள் வந்து வெளியே கொண்டு சென்றனர். பின்னர் அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் ஸ்மித்தின் வலது கை சுண்டு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது உறுதியானது. அதன் காரணமாக அவர் மிகப்பெரிய காயத்தை சந்தித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

பந்து சுண்டு விரலில் பலமாக தாக்கி காயத்தை ஏற்படுத்தியுள்ள வேளையில் விரலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு முற்றிலும் குணமடைய கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை ஆகும் என்று மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன.

இதையும் படிங்க : ஐ.பி.எல் போட்டிகளில் கிடைத்த முதல் ஊதியத்தை வைத்து தாய்க்கு பரிசளித்த துருவ் ஜுரேல் – நெகிழ்ச்சி சம்பவம்

இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு முழுவதுமே அவர் பல்வேறு தொடர்களை தவறவிடவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement