INDvsRSA : இந்த காரணத்திற்காக தான் டி காக் 2 ஆவது டி20 போட்டியில் விளையாடல – உறுதி செய்த தெ.ஆ கேப்டன்

Bavuma
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஜூன் 9ம் தேதி இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் நடைபெற்றது.

INDvsRSA

- Advertisement -

இந்த போட்டியில் தோல்வியில் இருந்து மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி மேலும் ஒருமுறை மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தென்ஆப்பிரிக்க அணியில் இடம் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 148 ரன்கள் மட்டுமே குவித்தது.

அதனைத்தொடர்ந்து அடுத்ததாக விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியானது 18.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்த தொடரிலும் தென்னாப்பிரிக்க அணி 2 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

dekock

இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியின்போது டாஸ் போட மைதானத்திற்கு வந்த தெ.ஆ அணியின் கேப்டன் தெம்பா பவுமா : டாசில் வெற்றி பெற்றவுடன் தாங்கள் பந்து வீசுவதாக குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து இந்த இரண்டாவது போட்டியில் அணியின் நட்சத்திர வீரரான குவிண்டன் டிகாக் விளையாடவில்லை என்றும் அவர் அறிவித்தார்.

- Advertisement -

அப்படி அவர் அறிவித்ததும் டி காக் ஏன் இந்த இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை என்ற குழப்பம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. அதை அப்போதே உறுதி செய்த பவுமா கூறுகையில் : இந்த இரண்டாவது போட்டிக்கு முன்னர் நடைபெற்ற பயிற்சியின் போது தனது இடது கையின் மணிக்கட்டில் டி காக் காயமடைந்ததாகவும் அதன் காரணமாகவே இந்த போட்டியை அவர் தவற விட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க : IND vs RSA : இவர் சரிப்பட்டு வரமாட்டார், தேவைக்கேற்ப கிடைத்த வாய்ப்பை வீணடித்த இளம் வீரர் – ரசிகர்கள் அதிருப்தி

மேலும் காயமடைந்த டி காக் விரைவில் அணியுடன் இணைவார் என்றும் அவர் கூறியிருந்தார். அப்படி டி காக் வெளியேறியதற்கு பதிலாக மாற்று வீரராக அணியில் இணைந்த கிளாஸன் நேற்றைய போட்டியில் 46 பந்துகளில் 5 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரி என 81 ரன்கள் அடித்து தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது மட்டுமின்றி ஆட்டநாயகன் விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement