ஆர்சிபியை தோற்கடிக்கும் அணிகளுக்கு வரலாற்றில் இப்படி ஒரு சாபமா – ரசிகர்களை தெறிக்கவிடும் புள்ளிவிவரம்

RcbvsCsk
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் புதிய கேப்டன் டுப்லஸ்ஸிஸ் தலைமையில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ மீண்டும் முக்கிய நாக் அவுட் போட்டிகளில் சொதப்பி தோல்வியடைந்தது. அதனால் வரலாற்றில் 15-ஆவது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்ட அந்த அணியை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வெறித்தனமாக கலாய்த்து வருகின்றனர். கடந்த 2008 முதல் அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி ஆகியோரின் தலைமையில் இறுதிப் போட்டி வரை சென்று கோப்பையை வெல்ல முடியாத அந்த அணி 2016இல் விராட் கோலி தலைமையில் கிறிஸ் கெயில், ஏபி டிவில்லியர்ஸ் போன்ற நட்சத்திரங்களுடன் கடுமையாக போராடி இறுதிப் போட்டி வரை சென்ற போதிலும் கடைசி நேரத்தில் சொதப்பி வெறும் 8 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையைத் தாரை வார்த்தது.

RCB Faf Du Plessis

- Advertisement -

அதனால் கேப்டனாக விராட் கோலி இருக்கும் வரை கோப்பையை பற்றி பெங்களூரு நினைத்துக்கூட பார்க்க முடியாது என்ற விமர்சனங்கள் எழுந்த கடந்த வருடம் அவர் பதவி விலகினார். இருப்பினும் இம்முறை தென் ஆப்பிரிக்காவை வழிநடத்திய கேப்டன்ஷிப் அனுபவம் கொண்ட டு பிளசிஸ் தலைமையில் தினேஷ் கார்த்திக் போன்ற நல்ல வீரர்களுடன் களமிறங்கிய பெங்களூரு கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் முக்கிய நேரத்தில் சொதப்பி பரிதாபமாக வெளியேறியது.

ஆர்சிபியும், கிண்டல்களும்:
பொதுவாக அதிக கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ள மும்பை, சென்னைக்கு இருக்கும் ரசிகர்களுக்கு ஈடாக கோப்பையை வெல்லாமலே ரசிகர்களை கொண்ட ஒரு அணி என்றால் அது பெங்களூரு ஆகும். விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் போன்ற நட்சத்திரங்கள் ஒரு கட்டத்தில் விசுவரூபம் எடுத்து வரலாற்று வெற்றிகளை பெற்று கொடுத்ததே அதற்கு முக்கிய காரணமாகும். அதே சமயம் ஐபிஎல் தொடரில் அதிக கேலி கிண்டல்களுக்கு உள்ளாகும் அணி என்றால் அதுவும் பெங்களூரு தான். ஏனெனில் அதே நட்சத்திர வீரர்கள் இருந்தும் முக்கிய நேரத்தில் சொதப்பும் அந்த அணி வெற்றியையும் கோப்பையையும் எதிரணிக்கு பரிசளிப்பதே அதற்கு காரணமாகும்.

Virat Kohli Shane watson RCB

எடுத்துக்காட்டாக ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை (2013இல், 263 ரன்கள்) பதிவு செய்த அதே பெங்களூரு அணி தான் 49 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி குறைந்தபட்ச ஸ்கோரையும் பதிவு செய்த பரிதாபத்திற்கு உள்ளானது. அதேபோல் மேற்குறிப்பிட்ட நட்சத்திர வீரர்களுடன் லீக் தொடரில் பட்டையை கிளப்பும் அந்த அணி ஒவ்வொரு வருடமும் நாக்அவுட் சுற்றில் கை கால் நடுங்கியது போல் சொதப்புவது தொடர் கதையாகியுள்ளது.

- Advertisement -

ஆர்சிபி சாபம்:
இந்நிலையில் பெங்களூருவை கோப்பையை வெல்ல விடாமல் தோற்கடிக்கும் எதிரணிகள் அதன் சாபத்திற்கு உள்ளாகின்றன என்பது போல் ஒரு புள்ளி விவரங்கள் ரசிகர்களை தெறிக்கவிடும் வகையில் அமைந்துள்ளதைப் பற்றி பார்ப்போம்.

RCB vs MI Rohit Sharma

1. அதாவது லீக் சுற்றில் கடினமாக உழைத்து பிளே ஆஃப் சுற்றுக்கு வரும் பெங்களூருவை நாக்-அவுட் சுற்றில் தோற்கடிக்கும் எந்த அணியும் வரலாற்றில் இதுவரை கோப்பையை வென்றதே இல்லை.

- Advertisement -

2. ஆம் கடந்த 2010இல் பிளே ஆஃப் சுற்று அறிமுகப் படுத்தப்படாத நிலைமையில் லீக் சுற்றில் அசத்தி நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற அனில் கும்ப்ளே தலைமையிலான பெங்களூருவை முதல் அரையிறுதிப் போட்டியில் சச்சின் தலைமையிலான மும்பை தோற்கடித்து வெளியேற்றியது. அந்த வெற்றியின் வாயிலாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற மும்பை கடைசியில் தோனி தலைமையிலான சென்னையிடம் தோல்வியடைந்து கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது.

rcbvscsk

3. அதேபோல் 2015 சீசனில் விராட் கோலி தலைமையில் லீக் போட்டியில் அசத்திய பெங்களூரு பிளே ஆப் சுற்றில் எலிமினேட்டரில் ராஜஸ்தானை வென்றது. ஆனால் பைனலுக்கு முந்தைய குவாலிபயர் 2 போட்டியில் பெங்களூருவை தோற்கடித்த தோனி தலைமையிலான சென்னை வீட்டுக்கு அனுப்பி வைத்தது. இருப்பினும் இறுதிப் போட்டியில் மும்பையிடம் தோல்வியடைந்த சென்னை கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது.

- Advertisement -

4. துபாயில் நடந்த 2020 சீசனில் மீண்டும் விராட் கோலி தலைமையில் அசத்திய பெங்களூருவை பிளே ஆப் சுற்றில் நடந்த எலிமினேட்டர் போட்டியில் தோற்கடித்த ஹைதராபாத் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அதற்கடுத்த குவாலிபயர் 2 போட்டியில் ஹைதராபாத்தை தோற்கடித்த டெல்லி பெங்களூருவின் பின்னாடியே வீட்டுக்கு அனுப்பி வைத்தது.

RCBvsSRH

5. 2021 சீசனில் மீண்டும் லீக் சுற்றில் அசத்தி பிளே-ஆப் சுற்றுக்கு வந்த பெங்களூருவை எலிமினேட்டர் போட்டியில் தோற்கடித்த கொல்கத்தா இறுதிப்போட்டிக்கு சென்றது. ஆனால் பைனலில் சென்னையிடம் தோல்வி அடைந்தயடைந்த கொல்கத்தா கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது.

5. அவ்வளவு ஏன் இந்த வருடம் கூட லீக் சுற்றில் மும்பையின் உதவியால் 4-வது அணியாக ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து எலிமினேட்டரில் ரஜத் படிதார் அதிரடியில் லக்னோவை பெங்களூரு தோற்கடித்தது. ஆனால் பெங்களூருவை குவாலிபயர் 2 போட்டியில் தோற்கடித்த ராஜஸ்தான் வீட்டுக்கு அனுப்பி வைத்தது.

இதையும் படிங்க : சர்வதேச டி20 போட்டிகளில் தரமில்லை, வருடத்துக்கு 2 ஐபிஎல் நடத்தலாம் – முன்னாள் வீரர்கள் கோரிக்கை

ஆனால் ஆர்சிபி சாபத்தை போல 2008க்கு பின் 13 வருடங்கள் கழித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அந்த அணி முதல் வருடத்தில் அதுவும் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத பாண்டியா தலைமையிலான குஜராத்திடம் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது.

Advertisement