ஷிகர் தவானுக்கு ஆதரவும் வாய்ப்பும் கொடுக்க வேண்டிய நேரமிது – வாசிம் ஜாபர் கூறும் காரணம் என்ன

Wasim-Jaffer
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணி முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த அவமான தோல்விகளை சந்தித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. இருப்பினும் அதற்கு பதிலடியாக டிசம்பர் 10ஆம் தேதியன்று நடைபெற்ற சம்பிரதாய கடைசிப் போட்டியில் பேட்டிங்கில் அடித்து நொறுக்கிய இந்தியா 227 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை ருசித்தது. சட்டக்கிரோம் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா இசான் கிசான் இரட்டை சதமடித்து 210 131) ரன்களும் விராட் கோலி சதமடித்து 113 (91) ரன்களும் குவித்த அதிரடியில் 50 ஓவர்களில் 409/8 ரன்கள் குவித்து.

IShan Kishan Virat Kohli

- Advertisement -

அதை துரத்திய வங்கதேசம் இம்முறை சிறப்பாக செயல்பட்ட இந்திய பவுலர்களிடம் ஆரம்ப முதலே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 34 ஓவரில் 182 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது. அதனால் அந்த அணி கோப்பையை வென்றாலும் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்த இந்தியா தொடரை இழந்தாலும் இஷான் கிசான் போன்ற நல்ல இளம் வீரர் கிடைத்த மகிழ்ச்சியில் 2023 உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

ஆதரவு கொடுங்க:

முன்னதாக காயமடைந்த கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பதில் இப்போட்டியில் களமிறங்கிய இசான் கிசான் அந்த வாய்ப்பை தங்கமாக மாற்றி ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் அதிவேகமாக இரட்டை சதமடித்த வீரர் என்ற இரட்டை உலக சாதனைகளை படைத்தார். மறுபுறம் ஏற்கனவே இத்தொடரில் சொதப்பிய சீனியர் தொடக்க வீரர் சிகர் தவான் பேட்டிங்க்கு சாதகமாக அமைந்த சட்டக்கிரோம் மைதானத்திலும் 3 ரன்னில் அவுட்டாகி சுமாராக செயல்பட்டார். முன்னதாக ஒரு காலத்தில் அபாரமாக செயல்பட்டு மிஸ்டர் ஐசிசி என்று பெயரெடுத்த அவர் 36 வயதை கடந்து விட்ட காரணத்தால் சமீக காலங்களாகவே சுமாராக செயல்படுகிறார்.

Shikhar-Dhawan

அதனால் இஷான் கிசான், சுப்மன் கில், சஞ்சு சாம்சன் போன்ற அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால் 2011 உலகக் கோப்பைக்கு முன்பாக யுவராஜ் சிங், விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் தடுமாறிய போதிலும் தொடர்ச்சியான வாய்ப்பு மற்றும் ஆதரவு காரணமாக சிறப்பாக செயல்பட்டு 28 வருடங்கள் கழித்து கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றியதாக தெரிவிக்கும் வாசிம் ஜாஃபர் அதே ஆதரவை ஷிகர் தவானுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“2011 உலக கோப்பைக்கு முன்பாக யுவராஜ் சிங்கிற்கு இந்திய அணி எப்படி ஆதரவு கொடுத்தது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். ஏனெனில் அதற்கு முன்பாக அவர் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதே உலகக் கோப்பைக்கு முன்பாக விராட் கோலியும் சில வருடங்கள் சுமாராகவே செயல்பட்டார். அந்த வகையில் ஷிகர் தவானுக்கும் நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். ஏனெனில் அவர் ஒரு முறை பார்முக்கு திருப்பி விட்டால் அதன் பின் தொடர்ந்து சதங்களை அடிக்கும் திறமை கொண்டவர். அவர் இதுவரை படைத்துள்ள சாதனைகளுக்காகவே அவருக்கு அணி நிர்வாகம் ஆதரவு கொடுக்க வேண்டும்”

Jaffer

“அத்துடன் ஆரம்ப காலங்களைப் போல் இல்லாமல் சமீப காலங்களில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்காததே அவரின் தற்போதைய தடுமாற்றத்திற்கு காரணம் என்று நினைக்கிறேன். சமீப காலங்களில் அவர் தொடர்ச்சியாக நிறைய ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. அதுவும் அவரது தடுமாற்றத்திற்கு ஒரு காரணமாகும். மேலும் இளம் வீரர்கள் இருப்பதால் யார் நம்முடைய 3வது மற்றும் 4வது ஓப்பனிங் வீரர், ஷிகர் தவானை என்ன செய்வது போன்ற முடிவுகளை எடுக்க தேர்வு குழுவினர் தடுமாறப் போகிறார்கள்”

இதையும் படிங்க: ப்ளீஸ் எனக்கு ஒரு சான்ஸ் தருவீங்களா, ஆதங்கத்துடன் இந்திய வீரர் கோரிக்கை – நிதர்சனத்தை உணர்த்தும் ரசிகர்கள்

“இருப்பினும் சீனியர் பேட்ஸ்மேனாக இத்தொடரில் சுமாராக செயல்பட்ட அவர் நல்ல சாதனைகளையும் புள்ளி விவரங்களையும் வைத்திருப்பதால் என்ன செய்யலாம் என்பதை தேர்வு குழுவினர் தான் முடிவு எடுக்க வேண்டும்” என்று கூறினார். இருப்பினும் ஏற்கனவே திறமை இருந்தும் அதிரடியாக விளையாட தவறுவதே இந்தியாவின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படும் நிலையில் அதற்கு தவான் போன்ற மூத்த வீரர்களை கழற்றி விட்டு சீறிப் பாயும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதே ஒரே வழியாகும்.

Advertisement