- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2026 புத்தாண்டில் இந்திய அணி விளையாட உள்ள அணைத்து தொடர்களின் அட்டவணை.. ஸ்பெஷல் பதிவு

உலகம் முழுவதிலும் 2026 ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக பிறந்துள்ளது. இந்த 2026 வருடம் அனைவருக்கும் இனிமையாகவும் வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துக்கள். இந்த 2026 புத்தாண்டில் ஐசிசி காலண்டரின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ள தொடர்கள் மற்றும் அதனுடைய அட்டவணை விவரங்களை பார்ப்போம்.

1. முதலாவதாக 2026 புத்தாண்டில் இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அதைத்தொடர்ந்து 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்தில் 5 டி20 போட்டிகளிலும் இந்தியா விளையாட உள்ளது.
ஜனவரி 11: முதல் ஒன்டே, வதோதரா
ஜனவரி 14: 2வது ஒன்டே, ராஜ்கோட்
ஜனவரி 18: 3வது ஒன்டே, இந்தூர்

- Advertisement -

புத்தாண்டில் இந்திய அணி:

ஜனவரி 21: முதல் டி20, நாக்பூர்
ஜனவரி 23: 2வது டி20, ராய்ப்பூர்
ஜனவரி 25: 3வது டி20, கௌகாத்தி
ஜனவரி 28: 4வது டி20, விசாகப்பட்டினம்
ஜனவரி 31: 5வது டி20, திருவனந்தபுரம்
2. அதை முடித்துக்கொண்டு பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.

அந்தத் தொடரில் இந்தியாவின் லீக் போட்டிகள் பின்வருமாறு:
பிப்ரவரி 7: இந்தியா – அமெரிக்கா, மும்பை
பிப்ரவரி 12: இந்தியா – நமீபியா, டெல்லி
பிப்ரவரி 15: இந்தியா – பாகிஸ்தான், கொழும்பு
பிப்ரவரி 18: இந்தியா – நெதர்லாந்து, அகமதாபாத்
3. அடுத்ததாக மார்ச் 26 முதல் மே 31 வரை இந்திய வீரர்கள் அனைவரும் ஐபிஎல் 2026 தொடரில் விளையாட உள்ளார்கள்.

- Advertisement -

புத்தாண்டு அட்டவணை:

4. அதை முடித்துக் கொண்டு ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா 1 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.
5. ஜூலை மாதம் இங்கிலாந்து செல்லும் இந்தியா அங்கு 5 டி20 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

ஜூலை 1: முதல் டி20, செஸ்டர்-லே-ஸ்ட்ரீட்
ஜூலை 4: 2வது டி20, மான்செஸ்டர்
ஜூலை 7: 3வது டி20, நாட்டிங்கம்
ஜூலை 9: 4வது டி20, பிரிஸ்டோல்
ஜூலை 11: 5வது டி20, சௌதம்டன்
ஜூலை 14: முதல் ஒன்டே, பர்மிங்காம்
ஜூலை 16: 2வது ஒன்டே, கார்டிப்
ஜூலை 19: 3வது ஒன்டே, லார்ட்ஸ், லண்டன்
6. அதை முடித்துக்கொண்டு இலங்கை செல்லும் இந்தியா அங்கு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதற்கான அட்டவணையும் வெளியாகவில்லை.

- Advertisement -

இந்தியா அசத்துமா:

7. செப்டம்பர் மாதம் வங்கதேசத்துக்கு செல்லும் இந்தியா அங்கு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்கான அட்டவணை வெளியாகவில்லை.
8. அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 டி20 மற்றும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ள அடுத்தடுத்த தொடர்களுக்கான அட்டவணையும் இன்னும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: ரூட்டும் பஸ்பாலில் விழுவாருன்னு நினைக்கல.. ஆஸியில் அசத்த அந்த இந்திய வீரர்களை மாதிரி ஆடனும்.. உத்தப்பா

9. அதற்கிடையே செப்டம்பர் 19 – அக்டோபர் 4 வரை ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டி20 ஃபார்மெட்டில் இந்தியா பங்கேற்க உள்ளது.
10. நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு செல்லும் இந்தியா அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்கான அட்டவணையும் வெளியாகவில்லை.
11. இறுதியாக டிசம்பர் மாதம் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்கான அட்டவணையும் பின்னர் வெளியாக உள்ளது.

- Advertisement -