ரூட்டும் பஸ்பாலில் விழுவாருன்னு நினைக்கல.. ஆஸியில் அசத்த அந்த இந்திய வீரர்களை மாதிரி ஆடனும்.. உத்தப்பா

Robin Uthappa
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் 2025/26 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் நடைபெற்று வருகின்றது. அந்தத் தொடரில் இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளின் முடிவில் 3 – 1* (5) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. அதனால் தொடர்ந்து 15வது வருடமாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா ஆஷஸ் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

மறுபுறம் பஸ்பால் அணுகுமுறையில் விளையாடி கோப்பையை வெல்வோம் என்று சவால் விட்ட இங்கிலாந்து தொடர்ந்து 15வது வருடமாக ஆஸ்திரேலியாவில் தோற்றது. இருப்பினும் 4வது போட்டியில் வென்ற அந்த அணி 15 வருடங்கள் 16 தொடர் தோல்விகளுக்கு பின் ஆஸ்திரேலியாவில் ஒரு வெற்றியைப் பெற்று நிம்மதி பெருமூச்சு விட்டது. முன்னதாக அத்தொடரில் 1, 4வது போட்டிகள் 2 நாட்களில் முடிந்தது சர்ச்சையை உண்டாக்கியது.

- Advertisement -

பொறுமை, நிதானம் அவசியம்:

அந்தளவுக்கு பெர்த், மெல்போர்ன் மைதானத்தின் ஆடுகளங்கள் பேட்டிங் செய்வதற்கு சவாலாகவும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவும் இருந்தது. இந்நிலையில் அதிகப்படியான வேகத்தைக் கொண்டுள்ள ஆஸ்திரேலியா பிட்ச்களில் ரஹானே, புஜாரா போன்ற இந்திய வீரர்களைப் போல் பொறுமையாகவும் நங்கூரமாகவும் விளையாடினால் தான் சாதிக்க முடியும் என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அவர்களைப் போன்ற திறமை கொண்ட இங்கிலாந்தின் ஜோ ரூட்டும் நிதானமாக விளையாடாமல் பஸ்பால் அணுகுமுறையில் விளையாடி சொதப்பியது ஏமாற்றமளிப்பதாக உத்தப்பா கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது இருவகையான சூழ்நிலையாகும். அது அடிப்பதற்கு சாத்தியமற்ற ஆடுகளம் கிடையாது. மெல்போர்ன் பிட்ச் வேகத்துக்கு சாதகமாக இருந்தது”

- Advertisement -

ஜோ ரூட்டும் விழுந்துட்டாரு:

“இப்போதெல்லாம் கிரிக்கெட் இப்படித்தான் விளையாடப்படுவதாக நான் நினைக்கிறேன். அது போன்ற பிட்ச்களில் உங்களிடம் சரியான டெக்னிக் மனநிலை இருந்தால் போராட முடியும். அது அதிக ரன்கள் அடிப்பதற்கு உதவக்கூடிய பிட்ச் கிடையாது. அங்கே நீங்கள் 300+ ரன்கள் அடிக்க முடியாது. ஆனால் 250 ரன்கள் அடிப்பது சாத்தியமானது. அதற்கு நீங்கள் சண்டையிட்டு புஜாரா, அஜிங்கிய ரகானே போல விளையாட வேண்டும்”

இதையும் படிங்க: இந்திய அணிக்கு கவலையே நீங்க தான் சூரியகுமார்.. ஃபார்முக்கு வர இதை ரெண்டை செய்ங்க.. ஸ்ரீகாந்த் அட்வைஸ்

“இப்போது நாம் டெஸ்ட் கிரிக்கெட்டை மாற்றி விளையாடுகிறோம். அதை நான் விரும்பவில்லை. எடுத்துக்காட்டாக ஆஷஸ் 2 நாட்களில் முடிந்ததை சொல்லலாம். நாம் இங்கே விளையாட்டை பொழுதுபோக்குக்காக விளையாடுகிறோமா? ஜோ ரூட்டும் அந்த சோதனையில் விழுந்துள்ளார். இவ்வளவு அனுபவம் கொண்டிருந்தும் எப்படி விளையாண்ட வேண்டும் என்று தெரியாத அவர் அட்டாக் செய்ய முயற்சித்தார். இப்படிப்பட்ட மாறுதல்கள் துரதிஷ்டவசமானது, அனுதாபத்தை உண்டாக்குகிறது” என்று கூறினார்.

Advertisement