- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஐசிசி டி20 உ.கோ 2026 அட்டவணை: இந்தியா – பாகிஸ்தான் மோதல் எப்போது? ஃபார்மட் விவரம் இதோ

ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கப் போகும் அத்தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதை நவம்பர் 25ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐசிசி தலைவர் ஜெய் ஷா, அணியின் முன்னாள் இந்நாள் கேப்டன்கள் ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ், மகளிர் கேப்டன் ஹர்மன்ப்ரீத் ஆகியோர் வெளியிட்டார்கள்.

அதன் படி ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை வரும் பிப்ரவரி 7ஆம் தேதி துவங்குகிறது. அத்தொடரில் நடப்புச் சாம்பியன் இந்தியா உட்பட உலகின் டாப் 20 அணிகள் கோப்பையை வெல்லும் நோக்கத்துடன் களமிறங்க உள்ளன. அதில் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக செமி ஃபைனல்கள் மற்றும் ஃபைனல் உட்பட மொத்தம் 55 போட்டிகள் நடைபெற உள்ளன.

- Advertisement -

ஃபார்மட் என்ன:

அந்த 20 அணிகளும் குரூப் ஏ, பி, சி மற்றும் டி ஆகிய தலா 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் ஏ பிரிவில் இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா அணிகள் இடம் பிடித்துள்ளன. குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஓமன் அணிகள் இடம் பிடித்துள்ளன.

இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், நேபால், இத்தாலி ஆகிய அணிகள் குரூப் சி பிரிவில் இடம் வகிக்கின்றன. குரூப் டி பிரிவில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், கனடா ஆகிய இடம் பிடித்துள்ளன. இதைத்தொடர்ந்து வரும் பிப்ரவரி 7 முதல் 20 வரை லீக் சுற்று நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்தியாவின் அட்டவணை:

அதில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணி மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்கள் பிடிக்கும் 8 அணிகள் மார்ச் ஒன்றாம் தேதி வரை நடைபெற உள்ள சூப்பர் 8 சுற்றில் விளையாடத் தகுதி பெறும். அந்த சூப்பர் 8 சுற்றில் 2 பிரிவில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் மோதும். அதனுடைய முடிவில் டாப் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் ஃபைனலுக்கு தகுதி பெறும்.

அதைத்தொடர்ந்து வரும் மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் கொழும்பு/கொல்கத்தா, மும்பை ஆகிய மைதானங்களில் 2 அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும். அதில் வெல்லும் 2 அணிகள் மார்ச் 8ஆம் தேதி அகமதாபாத்/ கொழும்புவில் நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் விளையாடும். இதில் பாகிஸ்தான் தங்களது போட்டிகளை எல்லைப் பிரச்சினை காரணமாக இலங்கையில் விளையாட உள்ளது.

இதையும் படிங்க: சஞ்சு சாம்சனுக்கு டெஸ்ட் போட்டியில் அந்த வாய்ப்பை தந்தா நல்லா ஆடுவார் – சுரேஷ் ரெய்னா கருத்து

ஒருவேளை அந்த அணி நாக் அவுட்டுக்கு தகுதி பெறாவிட்டால் 2 செமி ஃபைனல்கள் மற்றும் ஃபைனல் கொல்கத்தா, மும்பை, அகமதாபாத் ஆகிய மைதானங்களில் நடைபெறும். அத்தொடரில் தங்களது சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்கும் லட்சியத்துடன் களமிறங்கும் நடப்புச் சாம்பியன் இந்திய அணியின் லீக் சுற்று அட்டவணை இதோ:
பிப்ரவரி 7: இந்தியா – அமெரிக்கா, மும்பை
பிப்ரவரி 12: இந்தியா – நமீபியா, டெல்லி
பிப்ரவரி 15: இந்தியா – பாகிஸ்தான், கொழும்பு
பிப்ரவரி 18: இந்தியா – நெதர்லாந்து, அகமதாபாத்

- Advertisement -