இங்கிலாந்திலேயே சம்பவம் நடந்திருக்கு. டி20 உ.கோ வெல்ல வாய்ப்பிருக்கு – இந்தியாவை பாராட்டும் பாகிஸ்தான் வீரர்

Team India IND vs ENg
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நாட்டிங்கம் நகரில் ஜூலை 10-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 3-வது போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடி தோற்றது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக 215/7 ரன்கள் சேர்த்தது. ஜேசன் ராய் 27 (26) ஜோஸ் பட்லர் 18 (9) பிலிப் சால்ட் 8 (6) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு 4-வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்த டேவிட் மாலன் 6 பவுண்டரி 5 சிக்சருடன் 77 (39) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அவருடன் கடைசி வரை அவுட்டாகாமல் சிறப்பாக பேட்டிங் செய்த லிவிங்ஸ்டன் 4 சிக்சருடன் 42* (29) ரன்களும் ஹரி ப்ரூக் 19 (19) ரன்களும் கிறிஸ் ஜோர்டான் 11 (3) ரன்களும் எடுத்தனர். சுமாராக பந்துவீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 216 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ரிஷப் பண்ட் 1,  விராட் கோலி 11, ரோகித் சர்மா 11 என 3 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தனர்.

- Advertisement -

போராடி தோல்வி:
அதனால் 31/3 என மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் 4-ஆவது விக்கெட்டுக்கு அபாரமாக 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்காக போராடினார்கள். அதில் ஒருபுறம் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டு ரன்களை குவிக்க மறுபுறம் கடைசிவரை அதிரடியே காட்டாமல் பொறுமையாகவே பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் அய்யர் 28 (23) ரன்களில் அவுட்டானார். அந்த சமயத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 6 (7) ரவீந்திர ஜடேஜா 7 (4) என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி இந்தியாவை கைவிட்டார்கள்.

ஆனாலும் 19-வது ஓவரை முழு மூச்சை கொடுத்து போராடிய சூர்யகுமார் யாதவ் 14 பவுண்டரி 6 சிக்சருடன் சதமடித்து 117 (55) ரன்கள் குவித்து அட்டகாசமாக பேட்டிங் செய்து முடிந்தளவுக்கு போராடி அவுட்டானார். அதன் பின் பேட்ஸ்மேன்கள் இல்லாததால் 20 ஓவர்களில் 198/9 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தியா போராடி தோற்றது. இருப்பினும் முதல் 2 போட்டிகளில் முறையே 50, 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிகளைப் பெற்றிருந்த காரணத்தால் 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்ற இந்தியா இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து கோப்பையை வென்றது.

- Advertisement -

வலுவான இந்தியா:
ஏற்கனவே தொடரை கைப்பற்றியதால் இப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வளித்த இந்தியா உம்ரான் மாலிக், ஆவேஷ் கான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தது. அதில் அவர்கள் சுமாராக செயல்பட்ட போதிலும் பேட்டிங்கில் கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிய இந்தியா போராடி தான் தோற்றது. மேலும் தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், அர்ஷிதீப் சிங் போன்ற நிறைய தரமான இளம் வீரர்கள் இந்தியாவுக்காக விளையாட பெஞ்சில் காத்திருக்கிறார்கள். அந்த வகையில் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்காக ஏற்கனவே தரமான வீரர்களை இந்தியா கிட்டதட்ட கண்டறிந்துள்ளது.

கடந்த வருடம் துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் களமிறங்கிய இந்தியா பாகிஸ்தானிடம் தோற்று லீக் சுற்றுடன் வெளியேறியது. ஆனால் அதன்பின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை போன்ற அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் அடுத்தடுத்த வெற்றிகளை இந்தியா பெற்றது. மேலும் ஐபிஎல் 2022 தொடருக்கு பின் தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரிலும் இந்தியா வென்றது.

- Advertisement -

இங்கிலாந்தையே சாச்சுட்டீங்க:
ஆனாலும் சொந்த மண்ணில் வெல்வது சாதாரணம் வெளிநாட்டு மண்ணில் வலுவான அணிகளுக்கு எதிராக வெல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் ஜோஸ் பட்லர், ஜேசன் ராய், லிவிங்ஸ்டன் போன்ற தரமான வீரர்களை கொண்ட இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்துள்ள இந்தியா நாங்கள் உலகத்தரம் வாய்ந்த அணி என்று மீண்டும் நிரூபித்துள்ளது.

இந்நிலையில் வலுவான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே சாய்த்துள்ள இந்தியா அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் நட்சத்திரம் சாகித் அப்ரிடி பாராட்டியுள்ளார். இது பற்றி தனது ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு :

இதையும் படிங்க : IND vs ENG : சுயநலமில்லாமல் இந்தியாவின் நலனுக்காக மாபெரும் உலகசாதனையை தவறவிட்ட ரோஹித் சர்மா – முழுவிவரம்

“மிகச்சிறப்பான கிரிக்கெட் விளையாடிய இந்தியா இத்தொடரை வெல்வதற்கு தகுதியானவர்கள். அவர்களின் பந்துவீச்சு கவரும் வகையில் உள்ளதால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக உள்ளனர்” என்று கூறினார்.

Advertisement