IND vs ENG : சுயநலமில்லாமல் இந்தியாவின் நலனுக்காக மாபெரும் உலகசாதனையை தவறவிட்ட ரோஹித் சர்மா – முழுவிவரம்

Rohit-Sharma-IND-Captain
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்ற 3-வது டி20 போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது. நாட்டிங்காம் நகரில் இரவு 7 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதற்காக தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 215/7 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ஜோஸ் பட்லர் 18 (9) ரன்களிலும் ஜேசன் ராய் 27 (26) ரன்களிலும் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த பிலிப் சால்ட் 8 (6) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். அதனால் 84/3 என தடுமாறிய இங்கிலாந்தை அடுத்ததாக ஜோடி சேர்ந்து 4-வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவிட் மாலன் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் தங்களது அணியை மீட்டெடுத்தனர்.

Livingstone

- Advertisement -

அதில் 6 பவுண்டரி 5 சிக்சருடன் டேவிட் மாலன் 77 (39) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த மொய்ன் அலி கோல்டன் டக் அவுட்டானாலும் ஹரி ப்ரூக் 19 (9) கிறிஸ் ஜோர்டான் 11 (3) என அதிரடியான ரன்களை எடுத்தனர். மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் 4 சிக்சர்களுடன் 42* (29) ரன்கள் குவித்த லிவிங்ஸ்டன் பினிசிங் கொடுத்தார். சுமாராக பந்துவீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்சல் படேல் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 216 என்ற இலக்கை துரத்திய இந்தியாவிற்கு ரிஷப் பண்ட் 1 (5) விராட் கோலி 11 (6) ரோஹித் சர்மா 11 (12) என டாப் ஆர்டர் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி கைவிட்டனர்.

போராடியா சூரியா:
அதனால் 31/3 என மோசமான தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவிற்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவ் நங்கூரமாக நின்று ரன்களை குவித்தனர். 5-வது ஓவரில் ஜோடி சேர்ந்த இவர்கள் 15-வது ஓவர் வரை இங்கிலாந்து பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு 4-வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் அபார பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மீட்டெடுத்த போது கடைசிவரை பொறுமையாகவே விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 28 (23) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் ஃபினிஷிங் செய்ய வேண்டிய தினேஷ் கார்த்திக் 6 (7) ரவீந்திர ஜடேஜா 7 (4) என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி இந்தியாவை மேலும் கைவிட்டனர்.

Suryakumar yadhav

ஆனாலும் மறுபுறம் முழு மூச்சை கொடுத்து அதிரடியாகவும் அட்டகாசமாகவும் பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் தனது முதல் சதத்தை எடுத்து 14 பவுண்டரி 6 சிக்சருடன் 117 (55) ரன்கள் குவித்து 19-வது ஓவரில் போராடி ஆட்டமிழந்தார். அவருக்குப்பின் பேட்ஸ்மேன்களும் இல்லாத காரணத்தால் 20 ஓவர்களில் 198/9 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா போராடி தோற்றது. இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ரீஸ் டாப்லி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

சுயநலமில்லா ரோஹித்:
இப்போட்டியில் டாப் ஆர்டர் மற்றும் லோயர் பேட்ஸ்மேன்களில் யாரேனும் ஒருவர் கணிசமான 30 ரன்களை எடுத்திருந்தால் கூட இந்தியா வென்றிருக்கும் என்பதால் சூரியகுமார் யாதவின் போராட்டம் வீணானது. இருப்பினும் இத்தொடரில் முதல் 2 போட்டிகளில் ஏற்கனவே பெரிய வெற்றிகளை பதிவு செய்திருந்த இந்தியா 2 – 1* (3) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பையை முத்தமிட்டது. அதுவும் சமீபத்திய டெஸ்ட் போட்டியில் வரலாற்று தோல்வியை பரிசளித்த இங்கிலாந்துக்கு கேப்டன் ரோகித் சர்மா திரும்பியதுமே நடைபெற்ற இந்த டி20 தொடரில் மண்ணை கவ்வ வைக்கும் அளவுக்கு அபாரமாக செயல்பட்ட இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

IND vs ENG Rohit Sharma Yuzvendra Chahal

முன்னதாக இத்தொடரில் ஏற்கனவே தொடரை கைப்பற்றிய காரணத்தால் டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறியும் நோக்கில் சோதனை முயற்சியாக சம்பிரதாய 3-வது போட்டியில் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வெடுத்த ரோகித் சர்மா இளம் பவுலர்களுக்கு வாய்ப்பளித்தார். அதில் ஹர்ஷல் படேல், பிஷ்னோய் தவிர எஞ்சிய பவுலர்கள் சொதப்பினாலும் கடைசியில் இந்தியா போராடி தான் தோல்வியடைந்தது.

தவறவிட்ட சாதனை:
முன்னதாக முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பின் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 14 வெற்றிகளை பதிவு செய்த கேப்டனாக உலக சாதனை படைத்த ரோகித் சர்மா ஒட்டுமொத்தமாக கடைசியாக வழிநடத்திய 19 போட்டிகளில் இந்தியாவுக்கு தொடர்ச்சியாக 19 வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருந்தார். அந்த நிலைமையில் நேற்றைய போட்டியில் வென்றிருந்தால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியே அடையாமல் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்திருந்திருப்பார்.

Rohith

அதை செய்ய நினைத்திருந்தால் ஜஸ்பிரித் பும்ரா போன்ற முதன்மை வீரர்களை வைத்து அவரால் செய்திருக்க முடியும். ஆனால் அணி நலனுக்காக அதைப்பற்றி கவலைப்படாத அவர் அந்த சாதனையை தவறவிட்டுள்ளார். இருப்பினும் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்து ஆசிய கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. ரிக்கி பாண்டிங் : 20 (2008)
2. ரோஹித் சர்மா : 19 (2019/22)
3. ரிக்கி பாண்டிங் : 16 (2006/07)

Advertisement