IND vs AUS : அடுத்த போட்டிக்குள் அதற்கான காரணத்தை சொல்லியே ஆகணும் – ரோஹித்துக்கு கவாஸ்கர் நேரடியான கேள்வி

Gavaskar
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் பின் தங்கியுள்ளதால் கடைசி 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாட உள்ளது. முன்னதாக சமீபத்திய ஆசிய கோப்பையில் ஒரு எக்ஸ்ட்ரா வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் தோல்வியடைந்ததால் முகமது சமி மற்றும் தீபக் சஹர் ஆகியோரை மீண்டும் டி20 அணியில் கொண்டு வருமாறு எழுந்த கோரிக்கைகளை கவனித்த தேர்வுக்குழு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அந்த இருவரையும் ஸ்டேண்ட் பை லிஸ்டில் அறிவித்து ஏமாற்றத்தை கொடுத்தது.

Rohit Sharma Dinesh Karthik Umesh Yadav

- Advertisement -

ஆனாலும் தற்போது நடைபெறும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் அந்த இருவரும் முதன்மையான அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் ஷமி கரோனாவால் வெளியேறினார். மேலும் அர்ஷிதீப் சிங் ஆஸ்திரேலிய தொடரில் சேர்க்கப்படாத நிலையில் முதல் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா ஓய்வெடுத்த நிலையில் உலகக்கோப்பை அணியின் ஸ்டேண்ட் பை லிஸ்டில் இருக்கும் தீபக் சஹர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சம்பந்தமின்றி ஏற்கனவே ரன்களை வாரி வழங்கியதால் மொத்தமாக கழற்றி விடப்பட்ட உமேஷ் யாதவை வேண்டுமென்றே தூசி தட்டி மீண்டும் கொண்டு வந்த கேப்டன் ரோகித் சர்மா மொஹாலி போட்டியில் நேரடியாக வாய்ப்பளித்தார்.

சம்மந்தமற்ற தேர்வு:
அதில் முதல் 4 பந்துகளில் 4 பவுண்டரிகளை வழங்கிய உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்தாலும் 4 ஓவர்களை முழுமையாக வீச முடியாத அளவுக்கு 2 ஓவர்களிலேயே 27 ரன்களை வாரி வழங்கினார். உலகக் கோப்பைக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் கடந்த ஒரு வருடமாக சோதனை முயற்சி என்ற பெயரில் இது போன்ற தேவையற்ற மாற்றங்களை செய்து வரும் அணி நிர்வாகம் உம்ரான் மாலிக், நடராஜன், ஆவேஷ் கான் போன்ற தற்சமயத்தில் தொடர்புடைய வீரர்களை பயன்படுத்தாமல் சம்பந்தமின்றி உமேஷ் யாதவை பயன்படுத்துவது அனைவரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

KL Rahul IND Deepak Chahar

இந்நிலையில் உலகக்கோப்பை ஸ்டேண்ட் பை லிஸ்டில் இருந்தும் அதற்கு தயாராகும் வகையில் காயத்திலிருந்து திரும்பி ஜிம்பாப்வே தொடரில் பார்முக்கு வந்த தீபக் சஹாருக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன் என்பதை கேப்டன் ரோகித் சர்மா அடங்கிய அணி நிர்வாகம் விளக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அனேகமாக உமேஷ் யாதவ் போன்ற உலகக்கோப்பை ரிசர்வ் பட்டியலில் இல்லாத வீரருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது ஏன் என்பதையும் தீபக் சஹர் விளையாடாததை பற்றியும் அணி நிர்வாகம் செய்தியாளர்களிடம் தெரிவிக்க வேண்டும்”

- Advertisement -

“தீபக் சஹர் காயத்திலிருந்து குணமடைந்தது வந்துள்ளார். ஆனால் உலக கோப்பைக்கு போன்ற பெரிய தொடருக்கு முன்பாக உங்களது கால்கள் உங்களது பெல்டுக்கு கீழ் இருக்க வேண்டும். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் யாராவது காயடைந்தால் விளையாட வைக்கும் ஸ்டாண்ட் பை வீரராக தீபக் சஹரை நீங்கள் அழைத்துச் செல்கிறீர்கள். அப்படிப்பட்ட நிலையில் இது போன்ற தொடர்களில் பந்து வீசி அவர் பார்முக்கு வராவிட்டால் உலகக்கோப்பையில் நீங்கள் எதிர்பார்க்கும் வேலையை அவர் சிறப்பாக செய்து கொடுக்க முடியாது”

Gavaskar

“எனவே அடுத்த போட்டிக்கு முன்பாக நிகழும் செய்தியாளர்கள் சந்திப்பில் உமேஷ் யாதவ் ஏன் தேர்வு செய்யப்பட்டார் என்றும் தீபக் சாஹர் ஏன் விளையாடவில்லை என்றும் அணி நிர்வாகம் தெளிவாக பதில் சொல்ல வேண்டும். ஏனெனில் தீபக் சாஹர் காயத்தை எதுவும் சந்தித்தாரா என்பது எங்கள் யாருக்கும் தெரியாது” என்று கூறினார்.

இப்படி தேவையற்ற மாற்றங்களை செய்து வரும் ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் ஆகியோரது செயலுக்கு நிறைய முன்னாள் வீரர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அதை கொஞ்சமும் காதில் வாங்காத அவர்கள் 2007 உலக கோப்பை போல திறமை இருந்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் மாற்றங்களை செய்வதிலேயே குறியாக உள்ளனர். இதனால் நம்பர் ஒன் டி20 அணியாக இருந்தும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வது கடினமாக பார்க்கப்படுகிறது.

Advertisement