- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நியூஸிலாந்துக்கு எதிராக தமிழக வீரர் வருணுக்கு வாய்ப்பு.. கோலி ஸ்பெஷல் சாதனை.. டாஸ் பற்றி ரோஹித் பேட்டி

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை தொட்டுள்ளது. அதில் மார்ச் இரண்டாம் தேதி துபாயில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் கடைசி லீக் போட்டி துவங்கியது. இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

ஏற்கனவே இரு அணிகளும் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்ற நிலையில் தங்களுடைய பலத்தை சோதித்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் நோக்கத்துடன் இப்போட்டியில் மோதுகின்றன. அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் டாஸ் தோற்றாலும் இந்தியா முதலில் பேட்டிங் செய்வதையே விரும்புவதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார். மேலும் இந்தப் போட்டியில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி விளையாடுவதாகவும் அவர் அறிவித்தார்.

- Advertisement -

வருணுக்கு வாய்ப்பு:

அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா அணியிலிருந்து ஓய்வு எடுப்பதாகவும் ரோஹித் சர்மா தெரிவித்தார். கடந்த போட்டிகளில் ஸ்பின்னர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரோகித் கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் எப்படியாக இருந்தாலும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்புகிறோம்”

“எங்கள் முன்னே இருக்கும் விஷயத்தை ஆரம்பத்திலேயே எதிர்கொள்ள விரும்புகிறோம். கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் சேசிங் செய்து வெற்றி பெற்றோம். அதனால் இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் நாங்கள் பின்னர் எங்களுடைய பவுலர்களுக்கு சவால் கொடுக்க விரும்புகிறோம். அதே சமயம் எங்களுடைய அணுகுமுறை கடந்த போட்டிகளைப் போலவே ஒரே மாதிரியாக இருக்கும்”

- Advertisement -

சவாலுக்கு தயார்:

“ஹர்ஷித் ஓய்வு எடுக்க உள்ளார். அவருக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி எங்களுக்காக விளையாட உள்ளார். வெற்றி பெறுவதற்கு பவுலிங் செய்வதிலும் பார்ட்னர்ஷிப் அமைப்பது முக்கியம். எங்கள் பவுலர்கள் சேர்ந்து 19 விக்கெட்டுகளை கலவையாக எடுத்துள்ளார்கள். வேகப்பந்து வீச்சாளர்களும் விக்கெட்டுகளை எடுத்தார்கள்” எனக் கூறினார்

இதையும் படிங்க: நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இந்தியா தோக்கனும்.. வித்தியாசமான கருத்தை கூறும் – இந்திய ரசிகர்கள்

மற்ற படி கடந்தப் போட்டியில் விளையாடிய மற்ற அனைத்து வீரர்களும் இந்தப் போட்டியிலும் இந்திய அணிக்காக விளையாடுகிறார்கள். இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், எம்எஸ் தோனி, முகமது அசாருதீன், சௌரவ கங்குலி, யுவ்ராஜ் சிங்கிற்கு பின் 300 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 7வது இந்திய வீரராக விராட் கோலி சாதனை படைத்துள்ளார். இதைத் தொடர்ந்து வலுவான நியூசிலாந்தை தோற்கடித்து முதல் இடத்தைப் பிடிக்கும் நோக்கத்துடன் இந்தியா விளையாடத் வாங்கியுள்ளது.

- Advertisement -