4 ரன்ஸ் மட்டுமல்ல.. அம்பயர் அந்த 2 ரன்களையும் கொடுக்காம தோற்கடிச்சுட்டாரு.. வங்கதேச வீரர் வேதனை

Tawhid Hridoy
- Advertisement -

விறுவிறுப்பான தருணங்களுடன் நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ஜூன் 10ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் வங்கதேசத்தை 4 ரன்கள் வித்யாசத்தில் தென்னாப்பிரிக்கா தோற்கடித்தது. நியூயார்க் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா 20 ஓவரில் 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஹென்றிச் க்ளாஸென் 46, டேவிட் மில்லர் 29 ரன்கள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து 114 ரன்களை துரத்திய வங்கதேசம் 20 ஓவரில் 109/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக தவ்ஹீத் ஹ்ரீடாய் 37 ரன்கள், மஹமதுல்லா 20 ரன்கள் எடுத்தனர். அதனால் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா சூப்பர் 8 சுற்றுக்கு முதலில் அணியாக தகுதி பெற்றது. முன்னதாக அப்போட்டியில் ஓட்னெல் பார்ட்மேன் வீசிய 17வது ஓவரின் 2வது பந்து முகமதுல்லாவின் காலில் பட்டு பவுண்டரிக்கு சென்றது.

- Advertisement -

சுமாரான அம்பயரிங்:
அப்போது தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியினர் அவுட் கேட்டதைத் தொடர்ந்து களத்தில் இருந்த நடுவர் எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுத்தார். அதை எதிர்த்து முகமதுல்லா டிஆர்எஸ் எடுத்தார். அப்போது ஸ்டம்ப் மீது பந்து படாதது தெளிவாகத் தெரிந்ததால் 3வது நடுவர் தீர்ப்பை மாற்றி நாட் அவுட் வழங்கினார். ஆனாலும் களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுத்த காரணத்தால் ஏற்கனவே பவுண்டரி சென்றிருந்த அந்த பந்துக்கு 4 ரன்கள் வழங்கவில்லை.

ஏனெனில் ஐசிசி அப்பென்டிக்ஸ் டி விதிமுறைப்படி டிஆர்எஸ் எடுத்ததும் அந்தப் பந்து காலாவதியாகி விட்டதாக கருதப்படும். அதனால் அந்த பந்தில் எடுக்கப்படும் ரன்கள் வழங்கப்பட மாட்டாது என்பது விதிமுறையாகும். இந்நிலையில் அந்த விதிமுறையுடன் 2 ஒயிட் ரன்களை வழங்காமல் நடுவர்கள் தங்களுக்கு எதிராக தீர்ப்பை கொடுத்ததாக வங்கதேச வீரர் தவ்ஹீத் ஹ்ரிடாய் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதனாலயே தங்களுடைய வெற்றி பறிபோனதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “உண்மையாக இவ்வளவு நெருக்கமான போட்டியில் அது சரியான முடிவல்ல. என்னுடைய பார்வையில் அம்பயர் அதை அவுட் கொடுத்திருக்க வேண்டும். அதனால் 4 ரன்கள் கிடைத்திருந்தால் வெற்றி மாறியிருக்கும்”

இதையும் படிங்க: அவரு மட்டும் இதே பார்ம்ல இருந்தா கப் நமக்குத்தான்.. இந்திய கேப்டன் ரோஹித் சர்மா உறுதி – விவரம் இதோ

“விதிமுறைகள் என்னுடைய கைகள் இல்லை. ஆனால் அந்த 4 ரன்கள் மிகவும் முக்கியம். நடுவர்களும் மனிதர்கள் என்பதால் தவறுகள் செய்வது இயல்பு. ஆனால் சில சமயங்களில் அவர்கள் ஒய்ட் கொடுக்க வேண்டிய பந்துகளில் ஒயிட் கொடுக்கவில்லை. இது போன்ற மைதானத்தில் குறைந்த ரன்கள் அடிக்கப்படும் போட்டியில் அந்த ஓரிரு ரன்கள் பெரிய விஷயமாகும். அந்த 4 ரன்களும் 2 ஒய்ட்களும் நெருக்கமான முடிவுகள்” என்று கூறினார்.

Advertisement