இனிமே விவோ ஐ.பி.எல் இல்லை. டைட்டில் ஸ்பான்சரை கைப்பற்றிய இந்திய குழுமம் – எது தெரியுமா?

ipl
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் தொடரானது தற்போது 14 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து இந்தாண்டு நடைபெறவிருக்கும் 15-ஆவது ஐ.பி.எல் சீசனானது ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றும் அதற்கு முன்னதாக பிப்ரவரி இரண்டாவது வாரம் வீரர்களுக்கான மெகா ஏலமும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் புதிய டைட்டில் ஸ்பான்சராக டாடா குழுமம் மாறியுள்ளது.

IPL
IPL Cup

கடந்த மூன்று ஆண்டுகளாக ஐ.பி.எல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக இருந்துவரும் விவோ அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலகியுள்ளது. மொத்தம் ஐந்து ஆண்டுகள் 440 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த விவோ நிறுவனம் 2018, 19, 21 ஆகிய மூன்று ஆண்டுகள் டைட்டில் ஸ்பான்சராக இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் அடுத்துவரும் இரண்டு ஆண்டுகளுக்கு அவர்கள் ஸ்பான்சரில் இருந்து விலகியுள்ளனர். அதனால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு புதிய ஸ்பான்சராக டாடா குழுமம் மாறி உள்ளது. இதனை ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் உறுதி செய்துள்ளார்.

tata

சீன நிறுவனமான விவோ-விடம் இருந்து தற்போது இந்திய குழுமமான டாடா இந்த ஸ்பான்சர்ஷிப்பிற்கு மாறியுள்ளது. அடுத்து நடைபெற இருக்கும் 2022, 2023 ஆகிய சீசன்களில் டாடா ஐபிஎல் என்றுதான் அழைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement