லக்னோ அணி வழங்கிய பொன்னான வாய்ப்பை மறுத்த டஸ்கின் அகமது – காரணம் இதுதானாம்

Taskin-1
- Advertisement -

இந்தியாவில் இன்னும் ஒருசில தினங்களில் துவங்க உள்ள பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் புதிதாக பங்கேற்றுள்ள கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் தங்களது தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த அணியில் ஏழரை கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து வீரர் மார்க் உட் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலுமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

taskin 2

- Advertisement -

இதன் காரணமாக அவருக்கு பதிலாக மாற்று வீரரை தற்போது லக்னோ அணி தேர்வு செய்ய இருக்கிறது. அப்படி அவருக்கு மாற்று வீரராக தேர்வு செய்யப்பட இருந்த வீரரான பங்களாதேஷ் அணியை சேர்ந்த டஸ்கின் அகமதுக்கு லக்னோ அணி சார்பாக ஒரு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 26 வயதான வங்கதேசத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான இவர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வருவதன் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாட அவருக்கு வாய்ப்பு லக்னோ அணியின் மூலம் வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது அவர் அந்த வாய்ப்பினை மறுத்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளன. ஏற்கனவே லக்னோ அணியின் மென்டார் கௌதம் கம்பீர் டஸ்கின் அகமது எங்கள் அணியுடன் இணைந்து நன்றாக இருக்கும் என்றும் அவர் அணியில் இணையும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடரை தவிர்த்து விட்டு இங்கு வந்து அணியுடன் இணைவார் என்று கூறியிருந்தார்.

Taskin

ஆனால் தற்போது டஸ்கின் அகமது லக்னோ அணியுடன் இணைய மாட்டார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இது குறித்து பங்களாதேஷ் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் : பங்களாதேஷ் அணி தற்போது தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்றுவரும் ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து அங்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற இருக்கிறது.

- Advertisement -

அதனை தொடர்ந்து சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் பங்களாதேஷ் அணி விளையாட இருக்கிறது. இந்த தொடர்களில் முக்கியமான வீரராக டஸ்கின் அஹமது இடம் பெற்றுள்ளதால் அவர் ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார் என்று கூறியுள்ளது. மேலும் டஸ்கின் அகமதுவிடம் நாங்கள் இந்த ஐபிஎல் வாய்ப்பு குறித்து பேசி இருந்தோம். ஆனால் அவரும் அணியின் நலன் கருதி அதனை புரிந்து கொண்டு தான் ஐபிஎல் தொடரில் விளையாட வில்லை என்றும் கூறிவிட்டார்.

இதையும் படிங்க : என்னை மாதிரி வரும் வீரர்களுக்காக தான் நான் இதை தயார் பண்ணிட்டு இருக்கேன் – புகழிடம் பேசிய நடராஜன்

பங்களாதேஷ் அணி தென் ஆப்பிரிக்கா தொடரிலும் அதனைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் விளையாட இருக்கும்போது தான் அணியுடன் இணைந்திருக்கவே அவர் ஆவலாக இருப்பதாக கூறி ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டேன் என்று கூறிவிட்டதாகவும் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் சார்பாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement