என்னை மாதிரி வரும் வீரர்களுக்காக தான் நான் இதை தயார் பண்ணிட்டு இருக்கேன் – புகழிடம் பேசிய நடராஜன்

- Advertisement -

தமிழகத்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசியதன் மூலம் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் இடம் பிடித்தார். அதோடு அங்கு மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக விளையாடிய அவர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தவே அதனைத் தொடர்ந்து இந்திய அணியின் முக்கிய வீரராக தொடர்ச்சியாக இந்திய அணியில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

pugazh 1

- Advertisement -

ஆனால் இடையில் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட அவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் பெரும்பாலான போட்டிகளை தவறவிட்டார். ஆனால் இம்முறை தான் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் கைகோர்த்துள்ள அவர் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் காயத்தினால் அந்த வாய்ப்பை தவறவிட்ட நடராஜன் இந்த முறை ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பதை குறிவைத்து தற்போது பயிற்சி செய்து வருகிறார்.

இதற்கிடையில் கிரிக்கெட் பிரபலம் நடராஜனை விஜய் டீவி புகழ் சமீபத்தில் சந்தித்திருக்கிறார். மேலும், நடராஜன் வீட்டில் புகழுக்கு செமத்தியான கறி விருந்து வைத்திருக்கிறார்கள். இதுதொடர்பான வீடியோவை புகழ் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது பரட்டை புகழ் யூ-ட்யூப் சேனலில் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் புகழ், ரொம்ப நாளாவே நம்ம நட்ராஜ் உங்கள பாக்கணும் அண்ணா. கண்டிப்பா பாக்கணும்னு கேட்டுட்டே இருந்தார்.

nattu ground

அவர் வீட்டுக்கு போயிட்டு இருக்கோம் என்றார். அதற்குப் பிறகு நடராஜ் கூறியிருப்பது, எங்கப்பா தங்கராசு, அம்மா சாந்தா, எனக்கு மூன்று தங்கைகள், ஒரு தம்பி. எனக்கு நிறைய தடைகள் வந்தது. இங்கே இருந்து போறதுக்கு பஸ் கிடையாது. போட்டுக்க நல்ல துணி இருக்காது. முக்கியமாக பாத்ரூம் இருக்காது என்று உருக்கமாக நடராஜ் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். அது மட்டும் இல்லாமல் நடராஜ் அவர்கள் சர்வதேச அளவில் விளையாடினாலும் உள்ளூரில் இருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு தன் சொந்த முயற்சியில் கிரிக்கெட் கிரவுண்ட் ஒன்றை தயார் செய்து வருகிறார் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் என்னைப்போன்று கிராமத்தில் இருந்து வளரும் வீரர்கள் பெரும்பாலும் மேட் பிட்சில் தான் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். ஆனால் நாம் மாநில அளவிலோ அல்லது பெரிய அளவில் கிரிக்கெட் விளையாடும் போது டர்ப் மைதானத்தில் தான் விளையாடுகிறோம். நான் ஆரம்ப காலகட்டத்தில் பட்ட கஷ்டங்களை சந்தித்தேன். எனவே என்னை போன்று யாரும் கஷ்டபடக்கூடாது என்றும் என்னை போன்று வளரும் வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே தான் சொந்தமாக கிரிக்கெட் மைதானத்தை தயார் செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : எனக்கு அந்த பங்களாதேஷ் பையன் வேனும். அடம் பிடிக்கும் லக்னோ அணியின் மென்டர் – கவுதம் கம்பீர்

மேலும் சேலத்தை சுற்றி உருவாகும் வீரர்களுக்கு நிச்சயம் இங்கு சரியான முறையில் பயிற்சி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மைதானத்தை தயார் செய்து வருவதாக நடராஜன் உருக்கத்துடன் சில வார்த்தைகளை பகிர்ந்து கொண்டார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பாராட்டும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement