எனக்கு அந்த பங்களாதேஷ் பையன் வேனும். அடம் பிடிக்கும் லக்னோ அணியின் மென்டர் – கவுதம் கம்பீர்

Gambhir
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 15-வது சீசனானது இன்னும் ஒரு சில தினங்களில் கோலாகலமாக துவங்கவுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் மோதவுள்ளதால் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த தொடர் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ரசிகர்களுக்கு மிகப்பெரிய பொழுது போக்கினை வழங்க உள்ளது. ஏற்கனவே இருந்த எட்டு அணிகளுடன் புதிதாக இணைந்த குஜராத் மற்றும் லக்னோ அணிகள் இணைந்து இந்த ஐபிஎல் தொடரில் மோதவுள்ளன.

ipl

- Advertisement -

இதன் காரணமாக வீரர்களுக்கான மெகா ஏலம் நடத்தப்பட்டு தற்போது அனைத்து அணிகளும் போட்டியை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றன. இந்நிலையில் சில அணிகளில் இடம் பெற்றிருந்த வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது மாற்று வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி ஏழரை கோடி ரூபாய் கொடுத்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான மார்க் உட்டை வாங்கி இருந்தது.

ஆனால் தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மார்க் உட் அங்கு நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அந்த டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். மேலும் அவருக்கு ஏற்பட்ட காயத்தின் தன்மை அதிகரித்ததன் காரணமாக அவர் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதன் காரணமாக தற்போது அவருக்கான மாற்று வீரரை தேர்வு செய்வதில் லக்னோ அணி மிக தீவிரமாக இருக்கிறது.

Taskin

லக்னோ அணியின் மென்டாரான கௌதம் கம்பீர் தற்போது மார்க் உட்டுக்கான சரியான மாற்று வீரரை தேர்வு செய்யும் வேலையில் இறங்கி உள்ள நிலையில் அவர் பங்களாதேஷ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான டஸ்கின் அகமதுவை இந்த தொடரில் இணைக்க விரும்புகிறார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் டஸ்கின் அகமதுவை லக்னோ அணியில் இணைக்க விரும்புகிறேன். மேலும் அவர் இந்த தொடர் முழுவதும் எங்கள் அணிக்காக விளையாடினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

ஒருவேளை நாங்கள் வழங்கும் இந்த வாய்ப்பை அவர் ஏற்றுக்கொண்டால் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் முடிந்து டெஸ்ட் தொடரை அவர் தவிர்த்து விட்டு இங்கு வந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : மிஸ்டர் ஃபர்பெக்ட் : ஐபிஎல் வரலாற்றில் துல்லியமாக பந்துவீசி சாதனை படைத்த டாப் 5 பவுலர்கள்

ஏற்கனவே வங்கதேச அணி சார்பாக முஸ்தபிசுர் ரஹ்மான், ஷகிப் அல் ஹசன், மோர்டாசா போன்ற ஒரு சில வீரர்கள் மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடிய வேளையில் தற்போது டஸ்கின் அகமதுக்கு இந்த அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. 26 வயது இளம்வீரரான இவர் வங்கதேச அணிக்காக 10 டெஸ்ட் போட்டிகள், 47 ஒருநாள் போட்டிகள் மற்றும் 33 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement