மிஸ்டர் ஃபர்பெக்ட் : ஐபிஎல் வரலாற்றில் துல்லியமாக பந்துவீசி சாதனை படைத்த டாப் 5 பவுலர்கள்

Top 5 Bowlers With Best Bowing Economy in IPL History
- Advertisement -

உலகப்புகழ் பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்கள் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் சந்திக்கின்றன. இம்முறை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் விளையாடும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் நடைபெற உள்ளது. மேலும் இந்த வருட ஐபிஎல் இந்தியாவில் நடைபெற்றாலும் மும்பை, புனே, அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Ipl cup

- Advertisement -

மிஸ்டர் பர்பெக்ட்:
ஐபிஎல் தொடர் என்பது பேட்ஸ்மேன்களின் ராஜாங்கம் நடைபெறும் ஒரு கிரிக்கெட் தொடர் என்றால் மிகையாகாது. ஏனெனில் இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் பந்துவீச்சாளர்களை பந்தாடி பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிடும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்களை குவித்து மைதானத்திற்கு வரும் ரசிகர்களுக்கு விருந்து படைப்பார்கள்.

அப்படிப்பட்ட பேட்ஸ்மேன்களின் ராஜாங்கம் நிறைந்த இந்த தொடரில் சாதாரணமாக பந்து வீசுவதற்குள் ஒரு பவுலருக்கு உயிர் போய் உயிர் வந்துவிடும் என கூறலாம். அப்படிப்பட்ட நிலையில் ஐபிஎல் வரலாற்றில் மிகத் துல்லியமாக பந்துவீசி சாதனை படைத்த டாப் 5 நட்சத்திர பவுலர்களைப் பற்றி பார்ப்போம்.

Rashid

1. ரசித் கான்: ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரஷீத் கான் இன்றைய தேதியில் உலகின் நம்பர் ஒன் டி20 பந்து வீச்சாளராக வலம் வருகிறார். அதற்கு காரணம் ஐபிஎல் உட்பட உலகின் அனைத்து தொடர்களிலும் பங்கேற்று வரும் அவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் துல்லியமாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்து எதிரணிக்கு அச்சுறுத்தலை கொடுப்பவராக திகழ்கிறார். அப்படிப்பட்ட அவர் இதுவரை 76 ஐபிஎல் போட்டிகளில் 93 விக்கெட்களை 6.33 என்ற மிகத் துல்லியமான எக்கனாமியில் பதிவு செய்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த எக்கனாமியில் பந்து வீசிய பவுலர் என்ற அபார சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

2. அனில் கும்ப்ளே: சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகளை சாய்த்து சரித்திர சாதனை படைத்துள்ள ஜாம்பவான் அனில் கும்ப்ளே ஐபிஎல் தொடங்கப்பட்ட ஆரம்ப காலங்களில் பெங்களூரு அணிக்காக கேப்டனாக விளையாடினார். குறிப்பாக 2011-ஆம் ஆண்டு அவர் தலைமையில் அந்த அணி இறுதிப் போட்டி வரை சென்ற போதிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை. அப்படி ஒரு திறமை வாய்ந்த கேப்டனாக இருந்த அவர் ஒரு பந்துவீச்சாளராக 42 ஐபிஎல் போட்டிகளில் 45 விக்கெட்களை 6.57 என்ற மிகச் சிறப்பான எக்கனாமியில் எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் துல்லியமாக பந்துவீசிய இந்திய பவுலர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

mcgrath

3. கிளென் மெக்ராத்: ஆஸ்திரேலியாவின் நட்சத்திர முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளன் மேக்ஸ்வெல் சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட எத்தனையோ ஜாம்பவான்களை மிரட்டிய பந்துவீச்சாளர் என அனைவரும் அறிவோம். அப்படிப்பட்ட அவர் ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008-ஆம் ஆண்டு மட்டும் விளையாடிய 14 போட்டிகளில் 12 விக்கெட்களை 6.61 என்ற எக்கனாமியில் எடுத்து இந்தப் பட்டியலில் 3-வது இடம் பிடிக்கிறார்.

4. முத்தையா முரளிதரன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் உட்பட சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளராக சாதனை படைத்துள்ள இலங்கையின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் ஐபிஎல் தொடங்கிய காலகட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். சர்வதேச கிரிக்கெட்டில் தன்னை தரமானவர் என நிரூபித்த அவர் ஐபிஎல் தொடரிலும் 66 போட்டிகளில் 63 விக்கெட்டுகளை 6.67 என்ற சிறப்பான எக்கனாமியில் பதிவு செய்து இந்தப் பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார்.

5. சுனில் நரேன்: வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த மாயாஜால சுழல்பந்து வீச்சாளர் சுனில் நரேன் டி20 கிரிக்கெட் வரலாற்றில் சூப்பர் ஓவரில் மெய்டன் ஓவர் வீசிய ஒரே பந்துவீச்சாளர் என்ற சரித்திர சாதனை படைத்துள்ளார். அந்த அளவுக்கு துல்லியமாக பந்துவீசும் திறமை படைத்த அவர் 134 ஐபிஎல் போட்டிகளில் 143 விக்கெட்களை 6.74 என்ற சிறப்பான எக்கனாமியில் பதிவு செய்து இந்த பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.

Advertisement