நாட்டின் பெரிய தலைவர் தலையீடு, அஃப்ரிடியை மிஞ்சி ஒரே நாளில் ஓய்வை வாபஸ் பெற்ற தமீம் இக்பால் – கலாய்க்கும் ரசிகர்கள்

Tamim-1
- Advertisement -

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 2023 ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வங்கதேசம் விளையாடி வருகிறது. அதில் மழைக்கு மத்தியில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில் அடுத்த நாள் காலை கேப்டன் தமீம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மொத்தமாக விடை பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். குறிப்பாக கடந்த சில வருடங்களாகவே காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர் பெரும்பாலான தொடர்களில் விளையாடவில்லை.

இருப்பினும் உலகக் கோப்பைக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் அதற்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த ஆப்கானிஸ்தான் தொடரில் அவர் முழுமையாக குணமடையாமலேயே களமிறங்கியதாக தெரிகிறது. போதாக்குறைக்கு முதல் போட்டியில் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் வங்கதேச அணியின் பயிற்சியாளர் சண்டிகா மற்றும் வங்கதேச வாரிய தலைவர் நஸ்முல் ஹுசைன் ஆகியோர் “கேப்டனாக பொறுப்பின்றி இப்படி முழுமையாக குணமடையாமல் விளையாடாதீர்கள்” என்று பொதுவெளியில் விமர்சித்ததாக தெரிய வந்தது.

- Advertisement -

ஓய்வு முடிவு வாபஸ்:
அதன் காரணமாக அதிருப்தியில் இருந்த தமீம் இக்பால் பயிற்சியாளர் மற்றும் வங்கதேச வாரியத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரே நாள் இரவில் இப்படி அதிரடியான முடிவை வெளியிட்டது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. மேலும் இந்த முடிவை தன்னுடைய குடும்பத்தினருடன் ஆலோசித்து எடுத்ததாக தெரிவித்த அவர் இந்த பயணத்தில் ஆதரவாக இருந்த பயிற்சியாளர்கள், சக வீரர்கள் மற்றும் வங்கதேச வாரியத்திற்கு கண்ணீருடன் செய்தியாளர்கள் சந்திப்பில் நன்றி தெரிவித்து விடை பெற்றார். கடந்த 2007இல் 16 வயதில் அறிமுகமான அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வங்கதேச வீரர் போன்ற சாதனைகளை படைத்து ஜாம்பவானுக்கு நிகராக போற்றப்படும் செயல்பாடுகளை வெளிப்படுத்தினார் என்றே சொல்லலாம்.

அப்படிப்பட்ட அவர் திடீரென இப்படி 34 வயதிலேயே அதுவும் உலக கோப்பைக்கு 3 மாதங்கள் முன்பாக ஓய்வு பெற்றது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் வாழ்த்தியது. இந்நிலையில் வங்கதேசத்தை திரும்பிப் பார்க்க வைத்த இந்த செய்தியை அறிந்த அந்நாட்டு பிரதமர் சேக் ஹசீனா அவர்கள் தமீம் இக்பாலை நேரில் வர வைத்து இந்த முடிவின் பின்னணி காரணத்தை கேட்டறிந்ததாக தெரிகிறது. மேலும் வங்கதேச அணியின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை வாபஸ் பெறுமாறும் பிரதமர் அவரைக் கேட்டுக் கொண்டதாக தெரிய வருகிறது.

- Advertisement -

அத்துடன் அந்த சந்திப்பில் முன்னாள் கேப்டன் மஸ்ரபி மோர்டசா மற்றும் வங்கதேச வாரிய தலைவர் நஜ்முல் ஹசன் ஆகியோரும் இருந்ததாக அந்நாட்டின் பிரபல பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அப்படி நாட்டின் பிரதமர் கேட்டுக் கொண்டதுடன் வங்கதேச வாரிய தலைவரும் ஆதரவு தெரிவித்ததால் நேற்று அறிவித்த ஓய்வு முடிவை இன்று வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ள தமீம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட போவதாக கூறியுள்ளார்.

இருப்பினும் தற்போது முழுமையாக காயம் குணமடையாததால் ஆப்கானிஸ்தான் தொடரில் பங்கேற்காமல் ஓய்வெடுக்க உள்ள அவர் ஒன்றரை மாதங்கள் கழித்து வரும் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் 2023 ஆசிய கோப்பையிலிருந்து மீண்டும் விளையாட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மொத்தத்தில் சிறிய பிரச்சனைக்காக முதல் நாள் இரவோடு இரவாக ஓய்வு முடிவை அறிவித்த வங்கதேச கேப்டன் அடுத்த நாள் இரவோடு இரவாக அதை வாபஸ் பெற்றது ரசிகர்களை தற்போது கடுப்பாக வைத்துள்ளது.

இதையும் படிங்க:ப்ளீஸ் எனக்காக இதை மட்டும் செய்ங்க, முன்னாள் வீரர்களுக்கு ரியன் பராக் உருக்கமான கோரிக்கை – நடந்தது என்ன?

குறிப்பாக நாட்டில் உள்ள பிரச்சனைகளை பார்க்காமல் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதே வங்கதேச பிரதமரின் வேலையா என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். பொதுவாகவே வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவதற்கு முன்பாகவே பாம்பு நடனத்தை ஆடி கொண்டாடுவதும் சிறிய விஷயங்களுக்கு கூட பதற்றமடைந்து வெற்றிகளை கோட்டை விடுவதும் வழக்கமாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சில வருடங்கள் கழித்து வாபஸ் பெற்ற பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடியை மிஞ்சும் அளவுக்கு இப்படி ஒரே நாளில் ஓய்வு முடிவில் விளையாடிய தமீம் இக்பாலை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement