ப்ளீஸ் எனக்காக இதை மட்டும் செய்ங்க, முன்னாள் வீரர்களுக்கு ரியன் பராக் உருக்கமான கோரிக்கை – நடந்தது என்ன?

Parag
- Advertisement -

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ரியன் பராக் அண்டர்-19 அளவில் சிறப்பாக செயல்பட்டதால் கடந்த 2019 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாட தேர்வானார். அதில் ஹைதராபாத்துக்கு எதிரான ஒரு போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் அரை சதமடித்த வீரராக சாதனை படைத்து வெற்றி பெற வைத்த அவர் வித்தியாசமாக நடனமாடியதை மறக்க முடியாது. ஆனால் அதன் காரணமாக அவரிடம் ஏதோ ஒரு திறமை இருப்பதாக கருதிய ராஜஸ்தான் நிர்வாகம் தொடர்ந்து தக்க வைத்து வாய்ப்பு கொடுத்து வந்தது.

அதில் 2020 சீசனில் 12 போட்டிகளில் 86 ரன்கள் 2021 சீசனில் 11 போட்டிகளில் 93 ரன்கள் என சுமாராகவே செயல்பட்டதால் கழற்றி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தான் அப்படியே நேர்மாறாக மீண்டும் நம்பி 2022 சீசனில் 20 லட்சத்திலிருந்து 3.30 கோடி என்ற பெரிய தொகைக்கு தக்க வைத்தது. அந்த நிலைமையில் 2022 சீசனில் கேரியரில் முதல் முறையாக முழுமையான 17 போட்டிகளில் வாய்ப்பு பெற்ற ரியன் பராக் 183 ரன்களை 16.64 என்ற மோசமான சராசரியில் எடுத்து மீண்டும் சுமாராகவே செயல்பட்டார்.

- Advertisement -

உருக்கமான கோரிக்கை:
ஆனால் என்னமோ சாதித்தது போல் ட்விட்டரில் அதிகமாக பேசுவதை வழக்கமாக வைத்திருந்த அவர் கேட்ச் பிடித்த போது தமக்கு சாதகமாக தீர்ப்பு வழங்காத நடுவரை கலாய்த்தார். அதற்காக இந்த இளம் வயதில் இன்னும் சாதிக்காமல் இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கிய ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்தியூ ஹெய்டனையும் மறைமுகமாக ட்விட்டரில் கலாய்த்த அவரை முதலில் வாயில் பேசாமல் சிறப்பாக விளையாடி செயலில் காட்டுங்கள் என்று ரசிகர்கள் விமர்சித்து வந்தனர்.

அந்த ஐபிஎல் 2023 தொடரிலும் 78 ரன்கள் எடுத்து சுமாராகவே செயல்பட்ட அவர் ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் நிர்வாகத்தால் அதிரடியாக நீக்கப்பட்டார். அப்போது மலிங்காவை வலைப்பெயர்ச்சியில் அதிரடியாக அடிக்கும் எனக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது போல் அவர் வீடியோ வெளியிட்டதை ரசிகர்கள் கலாய்த்தனர். மேலும் வருங்காலங்களில் தோனியை போல் அசத்துவேன் என்று அவர் சமீபத்தில் தெரிவித்ததையும் ரசிகர்கள் கலாய்த்து தள்ளினார்கள்.

- Advertisement -

இந்நிலையில் ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டு சமூக வலைதளங்களில் தம்மை கலாய்ப்பதற்கு பதில் எப்படி முன்னேற வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை குறுஞ்செய்தியாக அனுப்புங்கள் என முன்னாள் வீரர்களிடம் ரியான் பராக் கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக பொதுவெளியில் தம்மை மனதளவில் பாதிக்கும் வகையில் விமர்சிப்பதற்கு பதிலாக குறுஞ்செய்தியாக அனுப்புமாறு கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி ராஜஸ்தான் நிர்வாகம் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியது பின்வருமாறு.

“பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் தாங்கள் கடினமாக உழைத்த பணத்தை செலுத்தி நாங்கள் எப்படி விளையாடுகிறோம் என்பதை பார்ப்பதற்காக மைதானத்திற்கு வருகிறார்கள். எனவே நாங்கள் சிறப்பாக செயல்படாமல் போனால் அவர்கள் வெறுக்கத்தான் செய்வார்கள் என்பதை நான் முழுமையாக புரிந்து கொள்கிறேன். இருப்பினும் சமூக வலைதள பக்கங்களில் அதிகாரப்பூர்வ பதிவு செய்யப்பட்ட கணக்கை வைத்திருக்கும் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணையாளர்கள் என்னைப் பற்றி வெளிப்படையாக விமர்சித்து பதிவிடுகிறார்கள்”

- Advertisement -

“எனவே அதற்கு பதிலாக நீங்கள் எனக்கு நேரடியாக மெசேஜ் அனுப்பலாம். உண்மையாக அதைத்தான் நான் மிகவும் விரும்புகிறேன். குறிப்பாக “ஹேய் நீங்கள் இப்படித்தான் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். இது போல விளையாடினால் நீங்கள் இன்னும் சிறப்பாக செயல்படலாம்” என்பது போன்ற ஆலோசனைகளை அவர்கள் எனக்கு அவர்கள் நேரடி குறுஞ்செய்தியாக அனுப்பலாம்” என்று கூறினார். முன்னதாக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்களே சுமாராக செயல்படும் போது சமூக வலைதளங்களில் நிறைய முன்னாள் வீரர்கள் வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரப்போகும் ரிங்கு சிங் – எந்த தொடரில் தெரியுமா? பிசிசிஐ வெளியிட்ட தகவல் இதோ

அப்படிப்பட்ட சூழ்நிலையில் எதுவுமே சாதிக்காத இவர் பொதுவெளியில் விமர்சிக்காமல் மெசேஜ் செய்யுங்கள் என்று கூறுவது ரசிகர்களை மேலும் கலாய்க்க தூண்டுகிறது என்று சொல்லலாம். இதைத்தொடர்ந்து இலங்கையில் நடைபெறும் இந்தியா ஏ அணி பங்கேற்கும் ஆசிய கோப்பையில் விளையாட ரியன் பராக் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement