அவரோட எனக்கு பிரச்சனை இருக்கு தான். ஆனா நாட்டுக்காக ஆடும்போது அதை மறந்துடுவேன் – தமீம் இக்பால் பேட்டி

Tamim-Iqbal
Advertisement

வங்கதேச கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனான தமீம் இக்பாலுக்கும், அந்த அணியை சேர்ந்த டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் கேப்டனான ஷாகிப் அல் ஹசனுக்கும் இடையே சுமூகமான உறவு கிடையாது என்றும் அவர்களுக்கு இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் கொண்ட மோதல் போக்கு தொடர்ந்து நிலவி வருகிறது. இதன் காரணமாக வீரர்களின் ஓய்வு அறையில் ஆரோக்கியமான சூழல் இல்லை என்பதினால் அந்த அணி சற்று பின்னடைவையும் சந்தித்துள்ளது.

Tamim Iqbal and Shakib

இந்நிலையில் இரண்டு கேப்டன்களிடமும் பேசி பார்த்தேன். ஆனால் அவர்களுக்கு இடையேயான இந்த கருத்து வேறுபாட்டை தீர்ப்பது என்பது சாதாரண விடயம் கிடையாது என்பதை புரிந்து கொண்டேன் என வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹசன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

ஏனெனில் ஒரே அணியைச் சேர்ந்த இரண்டு கேப்டன்களுக்குள் இப்படி கருத்து வேறுபாடு வரும்போது அது அணியின் நலனையும் அந்த விடயம் பாதிக்கும். அதனால் அவர்கள் இருவரையும் சேர்த்து பேச்சு வார்த்தை நடத்திய கிரிக்கெட் வாரிய தலைவரே இவ்வாறு கூறியுள்ளது வங்கதேச ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில் ஷாகிப் அல் ஹசன் உடனான உறவு குறித்து நேற்று பேட்டியளித்த தமீம் இக்பால் சில விடயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Shakib

நானும் அவரும் ஒன்றாக அமர்ந்து காபி குடிக்கிறோமா? இல்லையா? என்பது முக்கியம் கிடையாது. ஆனால் வங்கதேச அணியின் சீருடையை அணிந்து நாங்கள் களத்தில் இறங்கினால் ஒன்றாக இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். அதுதான் முக்கியமான விஷயம். ஒருநாள் போட்டியின் அணியின் கேப்டனாக நான் களத்தில் இருக்கும்போது அவருடைய உதவியை அனுபவ வீரர் என்ற முறையில் இருந்து பெறுகிறேன்.

- Advertisement -

அதேபோன்று டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடும் போது என்னுடைய ஆலோசனை தேவைப்பட்டால் அவருக்கும் நான் வழங்கி வருகிறேன். அதேபோன்று இருவரும் பேட்டிங் செய்கையில் இணைந்து ஒன்றாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறோம். அதோடு அணி வீரர்கள் விக்கெட்டை வீழ்த்தினால் அதனை கொண்டாடும்போதும் நிச்சயம் இயல்பாகவே இருந்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs AUS : அவங்க 2 பேரும் டீமுக்குள்ள வந்தது எங்களுக்கு ப்ளஸ் தான் – பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் நம்பிக்கை

இப்படி சாகிப் அல் ஹசன் உடனான மோதல் போக்கு தொடர்ந்து வந்தாலும் நாட்டுக்காக விளையாடுவது என்று வந்துவிட்டால் அதையெல்லாம் மறந்துவிட்டு ஒன்றாகவே இருப்பேன் என தமீம் இக்பால் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement