IND vs AUS : அவங்க 2 பேரும் டீமுக்குள்ள வந்தது எங்களுக்கு ப்ளஸ் தான் – பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் நம்பிக்கை

Peter Handscomb
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

David-Warner

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது வரும் மார்ச் 1-ஆம் தேதி இந்தூரில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து துவக்க வீரர் டேவிட் வார்னர் காயம் காரணமாக வெளியேறி உள்ளார்.

அதேபோன்று அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது தாயின் உடல்நிலை குறைவு காரணமாக அவரை சந்திக்க ஆஸ்திரேலியா சென்றுள்ளதால் அவரும் மூன்றாவது போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்டீவன் ஸ்மித் அந்த அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.

Pat-Cummins

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி இப்படி முக்கியமான இரண்டு வீரர்கள் இல்லாமல் விளையாட இருப்பது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை தந்துள்ளது. ஆனாலும் தற்போது எதிர்வரும் மூன்றாவது போட்டி குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் வீரர் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் : ஆஸ்திரேலிய அணியில் இருந்து வார்னர் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் விளையாட முடியாமல் போனது எங்களுக்கு ஒரு இழப்புதான்.

- Advertisement -

இருந்தாலும் அவர்களுக்கு இணையான உலகத்தரமான வீரர்களான ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் அணிக்கு திரும்ப உள்ளது எங்களுக்கு நிச்சயம் பலத்தை அளிக்கும். ஏனெனில் கேமரூன் கிரீன் மற்றும் ஸ்டார்க் என இருவருமே மிகச் சிறப்பான வீரர்கள். அவர்களால் எங்களது அணி பலம் பெற்றுள்ளது. கம்மின்ஸ் மற்றும் வார்னர் ஆகியோர் இல்லாத நிலையிலும் இந்திய அணியின் சவாலை எதிர்த்து எங்களால் விளையாட முடியும் என்று நினைக்கிறோம்.

இதையும் படிங்க : என்னோட கரியர்லயே ரொம்ப மோசமான நேரம் அதுதான். நான் நிறைய அழுத்திருக்கேன் – இஷாந்த் சர்மா வெளிப்படை

எதிர்வரும் இந்தூர் மற்றும் அகமதாபாத் டெஸ்ட் போட்டிகளில் அங்குள்ள சூழலுக்கு ஏற்ப பயிற்சிகளை பெற்று நிச்சயம் இந்திய அணி வீழ்த்த நாங்கள் வியூகம் வகுத்து வருகிறோம் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement