என்னோட கரியர்லயே ரொம்ப மோசமான நேரம் அதுதான். நான் நிறைய அழுத்திருக்கேன் – இஷாந்த் சர்மா வெளிப்படை

Ishanth-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா இந்திய அணிக்காக கடந்த 2007-ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 105 டெஸ்ட் போட்டிகள், 80 ஒருநாள் போட்டிகள் 14 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட்டிலும் விளையாடியுள்ள இஷாந்த் சர்மா ஐபிஎல் தொடரிலும் 93 போட்டிகளில் விளையாடிய நல்ல அனுபவம் பெற்றவர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் இடம் பெற்று வந்த இஷாந்த் சர்மா 2021-ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்.

ishanth 1

- Advertisement -

இந்நிலையில் இஷாந்த் சர்மா தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது கிரிக்கெட் கரியரின் மோசமான தருணம் எது? என்பது குறித்து தனது வெளிப்படையான கருத்தினை பகிர்ந்துள்ளார். அதன்படி இஷாந்த் சர்மா கூறுகையில் : 2013-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி தான் என்னுடைய கிரிக்கெட் கரியரின் மோசமான நேரம் என்று நினைக்கிறேன்.

அதைவிட என்னுடைய கரியரில் மோசமான நேரம் இருந்தது கிடையாது என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : அந்த போட்டியில் நான் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்ததால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அந்த சமயத்தில் நான் காதலித்துக் கொண்டிருந்ததால் என்னுடைய மனைவியிடம் ஒரு மாதம் வரை நான் எப்போது பேசினாலும் அந்த சம்பவம் குறித்து நினைவு கூர்ந்து அழுதிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Ishanth

மேலும் அந்த போட்டிக்கு பிறகு தோனி மற்றும் தவான் ஆகியோர் அறைக்கு வந்து தன்னை சந்தித்து நன்றாக விளையாடினீர்கள் என்று கூறி உற்சாகப்படுத்தி இருந்தாலும் அந்த போட்டியோடு நான் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த பவுலர் இல்லை என்ற பார்வை என்னை சுற்றி வருவதற்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்தது என்று இஷாந்த் சர்மா வெளிப்படையாக தனது கருத்தினைப் பகிர்ந்துள்ளார். இப்படி அவர் குறிப்பிட்ட அந்த போட்டியில் என்ன நடந்தது என்பதை இங்கு பார்ப்போம்.

- Advertisement -

கடந்த 2013-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடியது. இந்த தொடரின் மூன்றாவது போட்டி தான் இஷாந்த் சர்மா குறிப்பிட்ட அந்த போட்டி. இந்த 3 ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்களை குவித்தது. பின்னர் 304 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 304 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : அவர் எங்கேயும் போக மாட்டார். நாங்க விடமாட்டோம். சொதப்பல் வீரருக்கு ஆதரவு குடுத்த – ராகுல் டிராவிட்

இந்த போட்டியின் போது முக்கியமான கட்டத்தில் கடைசி மூன்று ஓவர்களில் ஆஸ்திரேலிய அணிக்கு 44 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இஷாந்த் சர்மா வீசிய ஒரு ஓவரில் 30 ரன்களை சென்றது. இப்படி அவர் ஒரே ஓவரில் 30 ரன்களை விட்டுக்கொடுத்ததால் இஷாந்த் சர்மா வீசிய அந்த ஒரு ஓவரே தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதைத்தான் இஷாந்த் சர்மா மோசமான தருணமாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement