அவர் எங்கேயும் போக மாட்டார். நாங்க விடமாட்டோம். சொதப்பல் வீரருக்கு ஆதரவு குடுத்த – ராகுல் டிராவிட்

Rahul-Dravid
Advertisement

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இந்த தொடரில் எஞ்சியுள்ள கடைசி 2 ஆட்டங்கள் அடுத்து நடைபெற உள்ளன.

IND vs AUS

இந்நிலையில் இந்த தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் துவக்க வீரரான கே.எல் ராகுல் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக சுப்மன் கில் துவக்க வீரராக களம் இறங்க வேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஏனெனில் இந்திய அணியின் துணைக்கேப்டனாக இருக்கும் கே.எல் ராகுல் அவரது பதவி காரணமாகவே தொடர்ச்சியாக அணியில் இடம்பெற்று வருகிறார் என்று பேசப்பட்டும் வருகிறது.

- Advertisement -

இவ்வேளையில் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கெதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இருந்து கே.எல். ராகுல் துணைக்கேப்டன் பதிவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக நிச்சயம் அவர் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக சுப்மன் கில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் அணியின் பயிற்சியாளர் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஏற்கனவே கே.எல் ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் மிக சிறப்பான ஒரு வீரர் என்பதனால் அவரை அணியில் நாங்கள் நிச்சயம் வைத்திருப்போம் என்று உறுதியளித்திருந்தனர்.

KL-Rahul

இதன் காரணமாகவே கே.எல் ராகுல் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். இப்படி ஒருபுறம் கே.எல் ராகுலுக்கு அழுத்தங்கள் கூடி வந்தாலும் தற்போது அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் வெளியிட்டுள்ள ஒரு கருத்தில் கே.எல் ராகுல் நிச்சயம் இந்திய அணியுடன் தான் இருப்பார் என்றும் அவர் மிகச் சிறப்பான கம்பேக் கொடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : கே.எல் ராகுலை அணியிலிருந்து நாங்கள் வெளியேற்ற விரும்பவில்லை. அவர் தொடர்ச்சியாக இந்திய அணியுடன் தான் பயணிப்பார். அவருக்கு தேவை சரியான திருப்பம் மட்டுமே. நிச்சயம் அவரது திறமையை அவர் விரைவில் வெளிக்கொண்டு சிறப்பான கம்பேக் கொடுப்பார் என்று உறுதி அளித்துள்ளார். இதன் காரணமாக எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளிலும் கே எல் ராகுல் விளையாடுவார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : எங்களுக்கும் சூரியகுமார் மாதிரி தரமான வீரர் கிடைச்சுட்டாரு – இளம் வீரரை ஒப்பிட்ட மிஸ்பா, கலாய்க்கும் ரசிகர்கள்

ஏற்கனவே கே.எல் ராகுல் தொடர்ச்சியாக சொதப்பி வரும் வேளையில் அவருக்கு பதிலாக நல்ல பார்மில் இருக்கும் சுப்மன் கில் விளையாட வேண்டும் என்று பலரும் கூறியுள்ள வேளையில் அணியில் பயிற்சியாளர் டிராவிட் அவருக்கு ஆதரவளித்துள்ளது அவரது இடத்தினை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement