எங்களுக்கும் சூரியகுமார் மாதிரி தரமான வீரர் கிடைச்சுட்டாரு – இளம் வீரரை ஒப்பிட்ட மிஸ்பா, கலாய்க்கும் ரசிகர்கள்

Misbah-ul-haq.jpeg
- Advertisement -

பாகிஸ்தானில் 2023 பிஎஸ்எல் டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அத்தொடரில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று நடைபெற்ற 13வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 220/6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இளம் வீரர் அசாம் கான் 9 பவுண்டரி 8 சிக்ஸருடன் அதிரடியாக 97 (42) ரன்கள் குவித்தார். அதை துரத்திய குயிட்டா அணி 19.1 ஓவரில் 157 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இஸ்லாமாபாத் அணிக்கு வெற்றியில் முக்கிய பங்காற்றிய அசாம் கான் சந்தேகமின்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Azam Khan

முன்னாள் வீரர் மொய்ன் கான் அவர்களுடைய மகனான இவர் சமீப காலங்களில் பிஎஸ்எல் தொடரில் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் பாகிஸ்தானுக்காக சர்வதேச டி20 கிரிக்கெட் அறிமுகமாகி 3 போட்டியில் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டார். அதனால் கழற்றி விடப்பட்ட அவர் மீண்டும் தேசிய அணிக்காக விளையாடுவதற்காக போராடி வரும் நிலையில் இப்போட்டியில் சரவெடியாக பேட்டிங் செய்து அனைவரது பாராட்டுகளை பெற்றார். குறிப்பாக முகமத் ஹஸ்னைன் வீசிய 19வது ஓவரில் அவர் தெறிக்க விட்ட ஹாட்ரிக் சிக்ஸர்களில் ஒன்று மைதானத்திற்கு வெளியே பறந்தது.

- Advertisement -

சூரியகுமாரை விட பெஸ்ட்:
அப்போது எதிரணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் தனது தந்தையை பார்த்து “எனது ஆட்டம் எப்படி இருக்கிறது” என்ற வகையில் அவர் மார்தட்டி கேட்ட போது “சிறப்பாக இருக்கிறது மகனே” என்ற வகையில் மொய்ன் கான் வெறுப்பு கலந்த அன்புடன் கைதட்டி பாராட்டியது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் அந்த போட்டியில் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் வித்யாசமான புதிய ஷாட்டுகளை அடித்து அசத்திய அசாம் கான் இந்தியாவின் சூரியகுமாரை விட சிறப்பாக விளையாடியதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் பாராட்டியுள்ளார்.

Azam khan

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “மைதானத்தின் அனைத்து திசைகளையும் பயன்படுத்தி நினைத்துப் பார்க்க முடியாத புதுப்புது ஷாட்களை அடிக்கும் சூரியகுமார் யாதவை பற்றி நாம் பேசுகிறோம். ஆனால் நேற்று அசாம் கான் விளையாடிய ஆட்டத்தில் ஓவர் பாயிண்ட், எக்ஸ்ட்ரா கவர், பைன் லெக், ஸ்கொயர் லெக் ஆகிய திசைகளில் அடித்த சாட் மிகவும் ஸ்பெஷலானது” என்று கூறினார்.

- Advertisement -

அதே போல் அசாம் கான் ஆட்டத்தை பற்றி அவருடைய தந்தை மொய்ன் கானிடம் போன் செய்து பாராட்டியதாக தெரிவிக்கும் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் பேசியது பின்வருமாறு. “நேற்றே மொயின் கானுக்கு போன் செய்த நான் அவருடைய மகனின் ஆட்டத்தை பற்றி பாராட்டுவதா அல்லது அவருடைய மகனால் அவருடைய அணி தோற்றத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதா என்று தெரியாமல் தடுமாறினேன். மேலும் இந்த ஒரு இன்னிங்ஸ் வைத்து உங்களது தந்தையின் சாயலை நீங்கள் பார்க்க முடியாது. இருப்பினும் அவர் சிறப்பாக விளையாடினார். அவர் இயற்கையான ஹிட்டர். அவருடைய ஃபிட்னஸில் சற்று முன்னேற்றம் இருந்தால் இன்னும் சிறப்பாக விளையாடலாம் என்று ஷாஹித், மிஸ்பா, இமாம் ஆகியோர் தெரிவித்தனர்” என்று கூறினார்.

Misbah-ul-Haq

ஆனால் இதை பார்க்கும் ரசிகர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் 3 போட்டிகளில் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அசாம் கான் எங்கே? தனது அறிமுக போட்டியிலேயே ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் பந்தில் சிக்ஸரை அடித்து தனது டி20 கேரியரை அட்டகாசமாக துவக்கிய சூரியகுமார் எங்கே? என்று கூறுகிறார்கள். அத்துடன் அனைத்து திசைகளிலும் அடித்து ஏபி டீ வில்லியர்ஸை மிஞ்சி 360 டிகிரியிலும் அபாரமாக செயல்படும் சூரியகுமார் விழுந்து உருண்டு புரண்டு பேட்டிங் செய்தாலும் காயத்தை சந்திக்காத அளவுக்கு 100% ஃபிட்டாக உள்ளார்.

இதையும் படிங்க:பாண்டிங், தோனியை மிஞ்சிய லென்னிங் புதிய உலக சாதனை – டபுள் ஹாட்ரிக் கோப்பை வென்று வரலாறு படைத்த ஆஸி மகளிரணி

ஆனால் அதிக உடல் எடையுடன் இருக்கும் அசாம் கான் இன்னும் உள்ளூர் கிரிக்கெட்டிலேயே அசத்தாத நிலைமையில் அதற்குள் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக இருக்கும் சூரியகுமார் யாதவுடன் ஒப்பிடுவதை நினைத்தால் என்ன சொல்வது என்று தெரியவில்லை என ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள்.

Advertisement