தல தோனிக்கு வாழ்த்து சொன்ன தமிழ்நாட்டின் தளபதி ஸ்டாலின் – இதற்காகத்தான் வெயிட்டிங்காம்

Stalin-and-Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இன்று 41 வது வயதில் அடி எடுத்து வைக்கிறார். தற்போது லண்டனில் இருக்கும் அவர் தனது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடி வரும் வேளையில் அவருக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்திய அணிக்காக கடந்த 2004 ஆம் ஆண்டு அறிமுகமான அவர் 2019 ஆம் ஆண்டு வரை 350 ஒரு நாள் போட்டிகள், 90 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அதோடு இந்திய அணிக்காக ஐ.சி.சி நடத்திய மூன்று விதமான கோப்பைகளையும் வென்று கொடுத்த ஒரே வெற்றிகரமான கேப்டன் என்ற பெயரையும் எடுத்த மகேந்திர சிங் டோனி இந்திய கிரிக்கெட்டின் ஒரு சகாப்தமாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். அதோடு சென்னை அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் அவர் நான்கு முறை ஐபிஎல் கோப்பையையும் வென்று கொடுத்து மாபெரும் கேப்டனாக தன்னை நிலை நிறுத்தி உள்ளார்.

- Advertisement -

உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை காட்டிலும் தமிழ்நாட்டில் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அதோடு ராஞ்சி நகரை அடுத்து சென்னை தான் தனது இரண்டாவது வீடு என்று கூறி வரும் டோனி சென்னையில் விளையாடிய பிறகுதான் நான் ஓய்வு பெறுவேன். சென்னையில் விளையாடாமல் கிரிக்கெட்டில் இருந்து வெளியேறுவது சரியாக இருக்காது என தமிழக ரசிகர்களுக்கு அவர் நெகிழ்ச்சியான கருத்தினையும் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் பல்வேறு தரப்பிலும் இருந்தும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வரும் வேளையில் தமிழக முதலமைச்சரான திமுக தலைவர் தளபதி ஸ்டாலினும் அவரது ட்விட்டர் பக்கத்தில் தோனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது :

- Advertisement -

“பிறந்தநாள் வாழ்த்துகள் தோனி.!! உங்கள் இணையற்ற சாதனைகள், எளிய கிராமப்புற பின்னணியில் இருந்து வரும் மில்லியன் கணக்கான இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் தொடர நம்பிக்கையை அளித்துள்ளது. எங்கள் சொந்த மண்ணில் (சென்னையில்) நீங்கள் மீண்டும் விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : தோனியின் 41-ஆவது பிறந்தநாள் பார்ட்டிக்கு நேரில் சென்று வாழ்த்திய ஒரே இந்திய வீரர் – வைரலாகும் புகைப்படம்

அவரது இந்த டிவிட்டர் பதிவின் மூலம் தோனி சென்னையில் விளையாட வேண்டும் என்ற ஆசை தனக்கும் இருப்பதை ஸ்டாலின் அவர்கள் வெளிப்படையாக பகிர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு தளபதி ஸ்டாலின் அவர்கள் பதிவிட்ட இந்த கருத்தானது இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டும் வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement