தோனியின் 41-ஆவது பிறந்தநாள் பார்ட்டிக்கு நேரில் சென்று வாழ்த்திய ஒரே இந்திய வீரர் – வைரலாகும் புகைப்படம்

Dhoni-Cake
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி தனது 12-வது ஆண்டு திருமணநாள் கொண்டாட்டத்தையும், 41-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் கொண்டாடுவதற்காக தற்போது தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் லண்டன் சென்றுள்ளார். அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே லண்டனில் அவர் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியது.

Dhoni-Bday

- Advertisement -

அந்த வகையில் அண்மையில் விம்பிள்டன் போட்டியை நேரில் சென்று கண்டுகளித்த தோனியின் புகைப்படம் வைரலாகியுள்ள வேளையில் தற்போது 41-வது பிறந்தநாளையும் அவர் லண்டனில் கொண்டாடியுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் ஹிட்டடித்து வருகின்றன. ஜூலை 7ஆம் தேதி இன்று தனது 41 வது பிறந்த நாளை கொண்டாடும் அவருக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகிய மகேந்திர சிங் தோனி தனது 15 ஆண்டுகால கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக டி20 உலக கோப்பை, 50 ஓவர் உலககோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து வகையான ஐசிசி கோப்பைகளையும் இந்திய அணிக்கு பெற்றுக் கொடுத்த ஒரே கேப்டன் என்ற சாதனையை படைத்தவர். அதோடு ஐபிஎல் தொடரில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வரும் அவர் இதுவரை நான்கு முறை ஐபிஎல் கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார்.

Dhoni and Pant

கிரிக்கெட் வரலாற்றில் என்றும் அழிக்க முடியாத புகழுடன் இருக்கும் தோனி இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் கிரிக்கெட் வீரராக இருந்து வருகிறார். இந்நிலையில் அவரது 41-வது பிறந்தநாளுக்காக வாழ்த்துக்கள் குவிந்து வரும் வேளையில் இந்திய அணியில் இருந்து ஒரே ஒரு வீரராக ரிஷப் பண்ட் அவரை நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். அவரது இந்த புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

- Advertisement -

தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்திய அணியானது ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடித்த பின்னர் அடுத்ததாக டி20 தொடரில் விளையாட இருக்கிறது. அதன்படி இன்று நடைமுறை இருக்கும் இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள ரிஷப் பண்ட் நேரடியாக லண்டன் சென்று டோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : வீடியோ : 41 ஆவது பிறந்தநாளை கேக் வெட்டி அமர்க்களமாக கொண்டாடிய தல தோனி – எங்க இருக்காரு தெரியுமா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டியில் அவர் இந்திய அணியில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணிக்கு பயோ பபுள் கட்டுப்பாடு இல்லை என்பதனால் எவ்வித தடையும் இன்றி அவர் தோனியின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று தான் தோனியின் சிஷ்யன் என்பதை நிரூபித்துள்ளார்.

Advertisement