வீடியோ : 41 ஆவது பிறந்தநாளை கேக் வெட்டி அமர்க்களமாக கொண்டாடிய தல தோனி – எங்க இருக்காரு தெரியுமா?

Dhoni-Bday
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சச்சினுக்கு அடுத்து அதிக அளவில் ரசிகர்கள் பட்டாளம் நிறைந்த ஒரு வீரராக இருக்கும் மகேந்திர சிங் தோனி இன்று தனது 41-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். கடந்த 1981 ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி ராஞ்சி நகரில் பிறந்த தோனி தனது ஆரம்பகட்ட கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் கடினப்பட்டு இந்திய அணிக்காக அறிமுகமாகினார். அப்படி இந்திய அணிக்காக அறிமுகமாகிய முதல் போட்டியின் போது தான் சந்தித்த முதல் பந்திலயே ஆட்டம் இழந்த அவர் அதன் பிறகு கங்குலியின் அசாத்தியமான நம்பிக்கை காரணமாக மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்து அதன் பின்னர் தொட்டதெல்லாம் வெற்றி என்ற அளவிற்கு தனது முன்னேற்றத்தை மின்னல் வேகத்தில் அளித்து இந்திய கிரிக்கெட்டில் அசுர வளர்ச்சி அடைந்தார்.

இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமானபோது அவரது அதிரடி பலரையும் வியக்க வைத்தது. அதனை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பினை ஏற்ற தோனி முதல் முறையாக ஐசிசி நடத்திய டி20 உலக கோப்பையை இந்திய அணிக்கு பெற்று தந்த மகத்தான கேப்டனாக மாறினார். அதனைத்தொடர்ந்து 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையும், 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என மூன்று வகையான ஐசிசி கோப்பைகளையும் இந்திய அணிக்காக பெற்று தந்த ஒரே கேப்டனாக பெயர் எடுத்தார்.

- Advertisement -

நாட்கள் செல்ல செல்ல இந்திய அணிக்காக பினிஷர் ரோலில் எண்ணற்ற பல போட்டிகளை வெற்றி பெற்று கொடுத்த அவர் இந்திய அணிக்காக 350 ஒருநாள் போட்டிகள், 90 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 98 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றாலும் இன்று வரை ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.

என்னதான் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்றளவும் அவர் மீது உள்ள பிரியும் ரசிகர்கள் மத்தியில் சிறிதும் குறையவில்லை என்றே கூறலாம். இந்நிலையில் இன்று 41 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் அவருக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வர ரசிகர்களும் அவருக்காக தங்களது வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது தோனி தனது 41 வது பிறந்த நாளை எங்கு கொண்டாடினார்? அவர் உடன் இருக்கும் நபர்கள் யார்? எங்கு இருக்கிறார்? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி தனது 41-வது பிறந்த நாளை கொண்டாட தோனி தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் லண்டன் சென்றுள்ளார்.

இதையும் படிங்க : வரலாற்றில் அதிமுறை ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த டாப் 4 மகத்தான பேட்ஸ்மேன்களின் பட்டியல்

அப்படி லண்டன் சென்ற அவர் விம்பிள்டன் போட்டியை கண்டு களித்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகியது. அதனை தொடர்ந்து லண்டனில் அவர் பிறந்த நாள் கொண்டாடி கேக் கட்டிங் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தோனியின் மனைவி சாக்சியும் அவரது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement