சென்னையை சேர்ந்த ஃபுட் டெலிவரி பையன்.. 2023 உ.கோ நெதர்லாந்து அணியின் நெட் பவுலராக மாறியது எப்படி.. அட்டகமான பின்னணி இதோ

Netherland
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. அதில் சொந்த மண்ணில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதற்கு சவாலை கொடுத்து கோப்பையை வெல்வதற்காக நடப்பு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் இறுதிக்கட்டமாக தயாராகி வருகின்றன.

அந்த அணிகளுக்கு மத்தியில் நெதர்லாந்து கிரிக்கெட் அணி கடந்த 2011க்குப்பின் முதல் முறையாக உலக கோப்பையில் களமிறங்குவதற்கு மும்முறமாக தயாராகி வருகிறது. சொல்லப்போனால் கத்துக்குட்டியாக பார்க்கப்படும் அந்த அணி கடந்த சில மாதங்களுக்கு முன் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற குவாலிபயர் தொடரில் வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து போன்ற அணிகளுக்கு சவாலை கொடுத்து ஃபைனலுக்கு முன்னேறி இந்த உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றது.

- Advertisement -

சென்னை பவுலர்:
அந்த நிலையில் பொதுவாகவே வெளிநாடுகளில் நடைபெறும் தொடர்களில் சிறந்து விளங்குவதற்காக அங்குள்ள கால சூழ்நிலைகளை நன்கு அறிந்த உள்ளூர் வீரர்களை நெட் புவலர்களாக வைத்து வெளிநாட்டு அணிகள் பயிற்சிகள் எடுப்பது வழக்கமாகும். மேலும் உள்ளூரில் சிறந்து விளங்கும் வீரர்களை ஏதேனும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களின் பரிந்துரைப்பவர்களையே வெளிநாட்டு அணிகள் நெட் பவுலராக தேர்வு செய்யும்.

ஆனால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நெதர்லாந்து அணி நிர்வாகம் தங்களுடைய அணிக்கு நெட் பவுலராக வர விரும்புவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவித்தது. குறிப்பாக அனுபவத்துடன் திறமையை வெளிப்படுத்தும் வீடியோவை தங்களுடைய இணையத்திற்கு அனுப்புமாறும் நெதர்லாந்து அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டது. அதை தொடர்ந்து இந்தியா முழுவதிலும் 10,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்த நிலையில் அதில் நால்வரை மட்டும் நெதர்லாந்து நிர்வாகம் தகுதியுடையவர்களாக தேர்வு செய்துள்ளது.

- Advertisement -

அதில் தமிழகத்தைச் சேர்ந்த லோகேஷ் குமார் எனும் இடது கை ஸ்பின்னரும் ஒருவராக தேர்வாகியுள்ளார். இந்திய வீரர் குல்தீப் யாதவ் போல சைனாமேன் ஆக்சனை பயன்படுத்தி பந்து வீசுவதால் இந்த வாய்ப்பைப் பெற்ற அவர் சென்னையில் பிரபல உணவு விநியோகம் செய்யும் ஆன்லைன் நிறுவனத்தில் பகுதி நேர உணவு பிரயோகிக்கும் வேலை செய்பவராக இருந்து வருகிறார். இதற்கு முன் தமிழ்நாடு வாரியம் நடத்தும் 5வது டிவிசன் உள்ளூர் லீக் தொடரில் விளையாடிய அனுபவம் கொண்ட அவர் இது பற்றி மகிழ்ச்சியுடன் பேசியது பின்வருமாறு.

“என்னுடைய கேரியரில் இது மிகவும் சிறந்த தருணமாகும். கடந்த 4 வருடங்களாக டிஎன்சிஏ 5வது டிவிஷனில் விளையாடியுள்ள நான் தற்போது 4வது டிவிஷனில் இந்தியன் ஆயில் அணிக்காக விளையாட பதிவு செய்துள்ளேன். தற்போது நெதர்லாந்து அணியின் நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்டதிலிருந்து என்னுடைய திறமை அங்கீகரிக்கப்பட்டதாக கருதுகிறேன்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து பெங்களூருவின் அழுர் நகரில் இருக்கும் நெதர்லாந்து அணியுடன் இணைந்த அவரை அந்த அணி நிர்வாகம் கைதட்டி வரவேற்று பயிற்சிகளை துவங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement