20, 30 ரன்களை வெச்சு இந்தியாவிற்கு விளையாட முடியாது – இளம் இந்திய வீரர் மீது அஜய் ஜடேஜா அதிருப்தி

Ajay
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 3-ஆம் தேதி நடைபெற்ற 48-வது லீக் போட்டியில் தொடர் வெற்றிகளால் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் வலுவான அணியாக காட்சியளிக்கும் குஜராத்தை தோற்கடித்த பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது பேட்ஸ்மேன்களை நம்பி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். ஆனால் அதற்கேற்றார் போல் அவர் உட்பட யாருமே பெரிய ரன்கள் அடிக்காத நிலையில் தமிழக வீரர் சாய் சுதர்சன் 65* ரன்கள் அடித்து காப்பாற்றியதால் அந்த அணி 20 ஓவர்களில் போராடி 143/8 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

அதை தொடர்ந்து 144 என்ற சுலபமான இலக்கை துரத்திய பஞ்சாப்புக்கு ஷிகர் தவான் 62* (53) பனுக்கா ராஜபக்சா 40 (28) லியாம் லிவிங்ஸ்டன் 30* (10) போன்ற வீரர்கள் அதிரடியாக ரன்களை குவித்ததால் 16 ஓவர்களிலேயே 145/2 ரன்கள் எடுத்த பஞ்சாப் அதிரடியான வெற்றி பெற்றது. மறுபுறம் பேட்டிங்கில் பெரிய ரன்களை எடுக்க தவறிய குஜராத் 2-வது தோல்வி பெற்றாலும் தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது.

ஏமாற்றும் சுப்மன்:
முன்னதாக இப்போட்டியில் குஜராத் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் சுப்மன் கில் 9 (6) ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றத்தை அளித்தார். ஏனெனில் கேப்டன் பாண்டியாவுக்கு பின் 8 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட அவர் இந்த வருடம் முதல் போட்டியிலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தாலும் 84 (46), 96 (59) என அடுத்த 2 போட்டிகளிலும் கில்லியாக சொல்லி அடித்து குஜராத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி நாயகன் விருதுகளை வென்றார்.

Shubman Gill

ஆனால் அதன்பின் 7, 13, 0, 7, 22, 31, 9 என பெரிய ரன்களை எடுக்க முடியாமல் அவர் தடுமாறுவது நாக் அவுட் சுற்றுக்கு முன்பாக குஜராத் அணி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய கவலையாக மாறியுள்ளது. ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திர வீரராக கருதப்படும் அவர் இப்படி நல்ல தொடக்கத்தை பெற்றும் பெரிய ரன்கள் அடிக்க முடியாமல் இருப்பது அவருக்கு ஒருபோதும் இந்திய அணியில் நிலையான வாய்ப்பை தேடித்தராது என்று முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

2 – 3 வருசமா:
இப்போது மட்டுமின்றி சமீப வருடங்களாகவே இதுபோல் நல்ல தொடக்கத்தை பெற்றாலும் சுப்மன் கில் சொதப்புகிறார் என்று அஜய் ஜடேஜா கூறியுள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் களத்தில் அவர் நிறைய நேரம் செலவிட வேண்டும். அந்த 2 இன்னிங்ஸ்சில் அவர் விளையாடியதைப்போல இதற்கு முன்பு விளையாடி காட்டியதில்லை. கடந்த 2 – 3 வருடங்களாகவே அவரின் கேரியர் இதே கதையைத்தான் சொல்கிறது. அவரிடம் திறமையும் ஸ்டைலும் உள்ளது. ஆனால் அவரோ 20, 25, 30, 40 போன்ற சுமாரான ரன்களை மட்டுமே அடிக்கிறார். இதுபோன்ற ரன்கள் நீங்கள் அதை பெரிதாக அடிக்க வேண்டும் என்பதை காட்டுகிறது. மேலும் இந்திய தேர்வு குழுவினர் எப்போதுமே 70, 80 ரன்களை தொடர்ச்சியாக அடிக்கும் வீரர்களை கொண்ட பட்டியலை தான் பார்ப்பார்கள். அதற்கு நீங்கள் முதலில் குறைந்த்து 60 பந்துகளையாவது எதிர்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

Gill

சுப்மன் கில் போன்ற இளம் வீரர் தொடர்ச்சியாக 20, 30 ரன்கள் அடிப்பது அவரிடம் திறமையும் ஸ்டைலும் உள்ளதை காட்டுகிறது என கூறும் அஜய் ஜடேஜா அந்த 20, 30 ரன்களை அவர் பெரிய அளவிலான ரன்களாக மாற்ற விரைவில் கற்றுக்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். ஏனெனில் இந்திய தேர்வு குழுவினர் எப்போதுமே 70, 80 ரன்கள் அடிக்கும் வீரர்களை தான் தேர்வு செய்வார்கள் என்பதால் உங்களிடம் திறமை இருந்தாலும் 20, 30 ரன்களை அடித்தாலும் அதனால் எந்த பயனும் ஏற்படாது என்று தெரிவித்தார்.

- Advertisement -

ராகுலிடம் கத்துக்கோங்க:
2015 போன்ற காலகட்டத்தில் இதே நிலைமையில் தவித்த மற்றொரு நட்சத்திர இந்திய வீரர்கள் கேஎல் ராகுல் அந்த யுக்தியை கையாண்டு பெரிய அளவில் ரன்கள் குவித்த காரணத்தாலேயே இன்று இந்தியாவின் அடுத்த கேப்டன் என பேசப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளதாக கூறும் அஜய் ஜடேஜா அவரை பார்த்து சுப்மன் கில் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியின் பிளானை வச்சே அவங்களை வீழ்த்திய பெங்களூரு. அசத்தல் வெற்றி – என்ன நடந்தது?

இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “அவர் கேஎல் ராகுல் புத்தகத்தை பின்பற்ற வேண்டும். ஏனெனில் அவரின் ஸ்டைல் ராகுலின் ஸ்டைல் போலவே உள்ளது. அதற்காக இருவரையும் நான் ஒப்பிடவில்லை. இருப்பினும் அவர்களின் ஸ்டைல் ஒன்றாகவே உள்ளது. எனவே அந்த யுக்தியை இவரும் கற்றுக்கொண்டால் கேஎல் ராகுல் போல் மிகப்பெரிய அளவில் வருவார்” என்று கூறினார்.

Advertisement